படம்: பூ சாண்டி வரான்
நடிப்பு: மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோஹரன், அம்சனி பெருமாள், வினோத் மோகன சுந்த்ரம், தினேஷைன்
தயாரிப்பு:: ட்ரையம் ஸ்டுடியோ, எஸ்.சாண்டி
இசை: டஷ்டின் ரிதுன் ஷா
ஒளிப்பதிவு: அசலிஷாம் பின் முஹமத் அலி
இயக்கம்: ஜே.கே.விக்கி
ரிலீஸ்: வெள்ளித்திரை டாக்கிஸ் முஜீப்
பி.ஆர்.ஒ: பி.ஸ்ரீ வெங்கடேஷ்
அமானுஷ்ய கதைகள் எழுதும் கதாசிரியர் மலேசியவில் நடந்த ஒரு அமானுஷ்ய நிகழ்வைபற்றி அறிந்துகொள்ள. ம்லேசியா வருகிறார். . பழங்கால நாணயங்கள், பழங்கால பொருட்கள் வாங்கி சேமிக்கும் நபர் வீட்டுக்கு வருகிறார். அந்த வீடு பூட்டி இருக்கவே சம்பந்தப்பட்ட நபருக்கு செல்போனில் தொடர்பு கொள்கிறார். அவர் வந்ததும் விபரம் கேட்கிறார். நடந்த அமானுஷ்யம் பற்றி அவர் சொல்கிறார். நண்பர் களுடன் பேயை அழைக்கும் ஹோஜா போர்டில் விளையாடி பேயை அழைக்கும்போது மல்லிகா என்ற பேய் வருகிறது. அதனிடம் பேசும்போது கண்ணுக்கு தெரியாத நதியில் விழுந்து தான் இறந்ததாக கூறுகிறது. அந்த. பெண் எப்படி இறந்தார் என்பதை அறிய அவரது பாய்ஃபிரண்டை தேடி செல்கின்றனர். அங்கு அந்த பெண் உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். அவரிடம் விசாரிக்கும் போது தனக்கு கிடைத்த பழங்கால நாணயம்பற்றி கூறி அந்த நாணயம் கிடைத்தபிறகு தன்னை அமானுஷ்ய உருவம் அடிக்கடி மிரட்டியதாக கூறுகிறார். நாணயம் கிடைத்த. இடத்திலேயே அதை மீண்டும் வைக்க செல்கின்றனர். அதன்பிறகு நடக்கும் பரபரப்பு அரங்கை அலறவிடுகிறது.
மலேசிய நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றிய படம் என்று சாதாரணமாக கடந்துவிட்டு செல்ல முடியாதபடியான அசத்தலான அமானுஷ்ய கதையாக உருவாகி இருக்கிறது பூ சாண்டி வரான்.
ம்லேசியாவில் பழங்கால நாணயங்கள், பொருட்கள் இருக்கும் வீட்டிற்குள் கதாசிரியர் மிர்ச்சி ரமணா நுழையும் போதே இது அமானுஷ்ய கதையை நோக்கித்தான் நகர்கிறது என்பதை உணரமுடிகிறது. தாமதமில்லாமல் உடனடியாக கதைக்குள் ரசிகர்களை இழுத்துவிடுகிறார் இயக்குனர்.
நண்பர்கள் அமர்ந்து பேயை அழைக்கும் ஹோஜா போர்டு விளையாட்டை தொடங்கியதும் 23 வயது இளம்பேய் மல்லிகா வந்திருப்பதாக தெரிந்ததும் அதனிடம் ஹோஜா போர்டு விளையாடும் நண்பர்கள் சகட்டுமேனிக்கு கேள்வி கேட்டு காமெடி செய்வது ரிலாக்ஸ்.
திடீரென்று நண்பர்களில் ஒருவர் செத்துகிடப்பதை கண்டதும் சக நண்பர்களைப்போலவே அரங்கமும் அதிர்ச்சியில் மூழ்கிவிடுகிறது. செத்துப்போன மல்லிகா யார் என்பதை தேடி நண்பர்கள் புறப்பட்டதும் காட்சிகளில் வேகம் கூடிவிடுகிறது. ஒரு வழியாக அந்த வீட்டை கண்டுபிடித்து சென்றதும் அங்கு மல்லிகா உயிருடன் இருப்பது கதைக்கு பெரிய டுவிஸ்ட்.
பழங்கால நாணயம் கிடைத்த விவரம்பற்றி மல்லிகா கூறும்போது சோழ மன்னர்களின் வரலாறு, சைவ சமய வரலாறு என கதை சரித்திர பின்னணியை நோக்கி செல்வது ஆர்வத்தை தூண்டுகிறது.
கிளைமாக்ஸில் 8 அடி உயர உருவம் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எழுந்து வரும்போது அச்சம் படர்கிறது.
பூச்சாண்டி என்பவர்கள் யார் என்பதற்கு சரித்திர ஆசிரியர் தரும் விளக்கம், கடாரம்கொண்டான் என்று சரித்திரத்தில் படித்த தகவலுக்கு விளக்கம் என ஒரு சரித்திர ஆராய்ச்சியே இந்த கதைக்காக நடத்தியிருப்பது தெரிகிறது.
படத்தில் நடித்திருக்கும் மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோஹரன், அம்சனி பெருமாள், வினோத் மோகன சுந்தரம், தினேஷைன என அத்தனைபேரின் யதார்த்தமான பங்களிப்பு நிஜ நிகழ்வை பார்ப்பதுபோன்று சாத்தியமாக்கி இருக்கின்றனர்.
பெயருக்காக. அமானுஷ்யம் என்றில்லாமல் ஒரு சரித்திர சம்பவத்தை பின்னணியாக வைத்து கதையை இயக்கி இருக்கும் இயக்குனர் ஜே.கே.விக்கி கிளைமாக்ஸுக்கு பிறகு அனைவரின் கவனத்திலும் வந்து நிற்கிறார். அவரே எடிட்டரும் என்பதால் காட்சிகளை சுவாரஸ்யம் குன்றவிடாமல் பார்த்துக் கொண்டிருக்குறார். படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் கிளைமாக்ஸில் லீட் கொடுத்துவிடுகிறார்.
ஒளிப்பதிவாளர் அசலிஷாம் பின் முஹமத் அலி கதைக்கு தேவையான எல்லா யுக்திகளையும் சரியாக கையாண்டிருக்கிறார்.
இசை அமைப்பளர் டஷ்டின் ரிதுன் ஷா சும்மாவே அலற விடாமல் கதையின் நேர்த்தியை ரசிக்கவிட்டிருப்பது. அருமை.
பூ சாண்டி வரான் – அமானுஷ்ய பிரியர்களை மட்டுமல்லாமல் தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும்