ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் மீது ஆருர் தமிழ்நாடான் என்பவர் காப்பி ரைட் உரிமைப்படி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் கோர்ட் பிறப்பித்தத்தாக தகவல் பரவியது.
இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கம் அற்க்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
எழும்பூர் நீதிமன்றம் எனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
எனது வழக்கறிஞர் சாய் குமரன் நீதிமன்றத்தை அணுகி இந்த செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார். எனக்கெ திராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்பட வில்லை என்பதை உடனடி யாக நீதிபதி உறுதி செய்தார். இணையதளத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந் துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கபடாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுதைப் பார்க்க ஆச்சரிய மாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக் கும் நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சளை தந்துள்ளது. இதுபோன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என தயவு கூர்ந்து அன்போடுகேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஷங்கர் கூறி உள்ளார்.