தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்; ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு போட்டி நடக்கிறது, தேர்தலில் போட்டியிட திமுக அதிமுக, அமமுக, மநீம கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி உருவாகி உள்ளது. கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள மற்றும் கொரானா கால தளர்வில் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் ஆனையம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளன, இதுகுறித்து தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
* வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
* வேட்பு மனுத்தாக்கலுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் 2 மட்டுக்கு மட்டுமே அனுமதி.
* வேட்புமனுத்தாக்கல் செய்பவர்கள் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் வாகனத்தில் வரக்கூடாது.
* வேட்புமனு விண்ணப்பங்களை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை கம்ப்யூட்டரிலேயே தட்டச்சு செய்து பூர்த்தி செய்து, அச்சு நகல் டுத்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கலாம்.
* ஆன்லைன் மூலமாக பிரமாண பத்திரத்தை, சொத்து, கடன் உள்ளிட்ட விவரங்களுடன் பூர்த்தி செய்து அளிக்கலாம். நோட்டரி மூலம் ஒப்புதல் பெற்று நேரடியாகவும் அளிக்கலாம். ஆன்லைன் மூலம் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது.
* டெபாசிட் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி இந்த தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. நேரடியாகவும் டெபாசிட் தொகையை செலுத்தலாம்.
* எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு டெபாசிட் தொகை ரூ.5 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம்..
* வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் வந்துவிடக் கூடாது. வெவ்வேறு நேரம் அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி அளிப்பார். .
* காலை 11 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடியும்.
* சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் வேட்புமனு செய முடியாது.
* தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை. *
தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா சோதனையும் கட்டாயமாக்கப்படவில்லை.
* ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குப்பதிவு தினத்தில் 3 உதவியாளர்களை கூடுதலாக நியமிக்கப்படுவார்கள்.
* மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை ஒஉ உதவியாளர் அளிப்பாட்ர்.
* வாக்குச்சாவடிக்கு வெளியே 2 உதவியாளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்ஸ்ரீகைக்காக சுகாதாரத்துறை நியமிக்கும். உடல் வெப்பம் சோதிபது, சானிடைசர் த்ருவது போன்ற பணிகளை செய்வார்கள்.
* தபால் ஓட்டு போடுவதற்கு மாற்றுத்திறனாளிகளை தபால்,ஓட்டு போடுவது கட்டாயமல்ல. நேரடியாக வாக்களிக்கலாம்..
* ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு குறிப்பிட்ட தொகை நிதி வழங்கப்படும் என்ற அரசியல் கட்சிகளின் அறிவிப்பில் தேர்தல் ஆணையம் தனிச்சையாக தலையிடாது.
* அரசு என்ற முறையில், புதிய திட்டங்களை அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டால் அது தேர்தல் நடத்தை விதிகளுக்கு கீழ் வரும்.
இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.