Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வரும் 23ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் தமிழகத்தில் அமல்படுத் தப்பட்டுள்ளது. வரும் 23-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ளதால்  தொடர்ந்து நீடிப்பது குறித்து  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தமிழகத்தில் தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு செப். 6-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவ தாக அரசு அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு,:
* செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும்.
* 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப். 15ஆம் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.
* ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.
* தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி
* கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி
* இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி
* தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி
* வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்பட அனுமதி
* கடற்கரைகளில் மக்களுக்கு மீண்டும் அனுமதி (இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்)
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Vaali Mohan Das Directorial Movie Rangoli

Jai Chandran

‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு சர்வதேச பாராட்டு..

Jai Chandran

காமராஜர் இல்லத்தில் படக்குழு அன்னதானம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend