படம்: பூமிகா
நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ், விது, அவந்திகா, சூர்யா கணபதி, மாதுரி, பாவேல் நவகீதன்
தயாரிப்பு::கார்த்திகேயன் சந்தானம்,சுதன் சுந்தரம், ஜெயராமன்
இசை: பிருத்வி சந்திரசேகர்
ஒளிப்பதிவு: ராபர்டோ ஜசாரா
இயக்கம்: ரத்திந்திரன் ஆர் பிரசாத்
விது., ஐஸ்வர்யா ராஜேஷ் காதலித்து திருமணம் செய்கின் றனர். இதற்கு குடும்பத்தினர் தெரிவித்த எதிர்ப்பால் தனித்து வாழ்கின்றனர் ஐஸ்வர்யாவின் மகன் பேச்சு சரியாக வராமல் ஆட்டிசம் போன்ற பாதிப்புடன் இருக்கிறான். பொருளாதார ரீதியாக உயரவேண்டும் என்பதற்காக காட்டுப்பகுதியில் உள்ள பெரிய கட்டிடத்தை சீரமைக்கும் காண்டிராக்ட் எடுக்கும் விது, மனைவி ஐஸ்வர்யா, குழந்தை மற்றும் தங்கை, பெண். பொறியாளருடன் செல்கிறார். வேலையை தொடங்குவதற்கு அவர்கள் தயாராகும் நிலையில் அசாதாரண சம்பவங்கள் நடக்கிறது. சார்ஜ் இல்லாத செல்போனில் தகவல்கள் வருகிறது. அதைக் கண்டு பயப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு பேய் தங்களை தொடர்புகொள்கிறது என்பதை உணர்ந்து அதனிடம் ஐஸ்வர்யா பேசுகிறார். ஒரு கட்டத்தில் நேரடியாக அந்த பேய் தோன்றி அவர்களை தாக்குகிறது எதனால் அவர்கள் பேயால் தாக்கப்படுு கிறார்கள் என்பது தெரியும்போது அதிர்ச்சிகரமன தகவல் வெளியாகிறது. அந்த மர்ம பேய் யார் என்பது கிளைமாக்சில் தெரிகிறது.
பூமிகா என்றதும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதை எனபதை டைட்டில் உணர்த்தினாலும் இதுவரை சொல்லாத கோணத்தில் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். காட்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்பாராமல் நடக்கும் கார் விபதது ஆளை ததூக்கிப்போடுகிறது. கட் செய்தால் ஐஸ்வார்யாவிடமிருந்து சீன் தொடங்குகிறது.
குழந்தைக்கு பேச்சு பயிற்சி கொடுத்துவிட்டு அழைத்து வரும் ஐஸ்வர்யா கணவர் மற்றும் பொறி யாளர்களுடன் காட்டுப்ப்குதி பங்களாவுக்கு காரில் செல்லும் போதே அந்த தனிமையான கட்டிடத்தில் ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பதபோல் உணரவைக்கிறது. காட்சிகள் நகர நகர அந்த மயான அமைதி அச்சத்தை படரவிடுகிறது.
செல்போனில் செல்ஃபி எடுககும் மாதுரி, சூர்யா இருவரும் அந்த போட்டோவிலேயே தானும் இருப்பதாக பேய் மெசேஜ் அனுப்பியதும் திகில் தொடங்குகிறது. அங்கு பேய் இருப்பதை அறிந்ததும் மாதுரி அலறவதும் அந்த அலறல் பேய் பயத்தை விட அதிகம் பயமுறுத்துகிறது.
யார் அந்த பேய் என ஐஸ்வர்யாவும், விதுவும் ஆராய தொடங்கியதும் கதை வேறுபக்கம் திசை திரும்புகிறது.
ஆட்டிஸம் பாதித்த அவந்திகாவின் கதை தொடங்குகிறது. பள்ளிக் கூடத்தில் சேர்க்க மறுத்தாலும் அவரது ஓவிய திறமை வெளிநாட்டு ஓவியரை ஈர்க்கிறது. பின்னர் அவர் ஏன் பேயாக மாறுகிறார் என்பது சஸ்பென்ஸ்.
அவந்திகாவின்்நடிப்பு எதார்த்தம். ஆட்டிஸம் பாதித்த குழந்தை யாகவே மாறியிருக்கிறார். பூமியையும் இயற்கையையும் அழிக்கும்்மனிதர்கள் மீது காட்டும் கோபம் சிந்திக்க தூண்டுகிறது.
உதவியாளராக வரும் பாவல் நவகீதன் கதாபாத்திரம் அடிக்கடி சந்தேக ரேகைளை படரவிட்டு ஆர்வத்தை தூண்டுகிறது.
அமானுஷ்ய இடத்திலிருந்து எல்லோரும் தப்பி வந்தபிறகு மீண்டும ஐஸ்வர்யா கணவர் அந்த இடத்துக்கு செல்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்டோன் பெஞச், பேஷன், ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை திகில் படமாக ரத்திந்திரன் ஆர் பிரசாத் இயக்கி இருந்தாலும் அதில் ஒரு முக்கிய கருவை உள்ளடக்கியிருப்பது பாராட்டுக்குரியது .
ராபர்டோ ஜஸாரா ஒளிப்பதிவும் பிருத்வி சந்திரசேகரின் அளவான இசையும கதைக்கு கைகொடுத் திருக்கிறது.
பூமிகா – திகிலூட்டுகிறாள்.

