Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஏவிஎம்-யின் மாஸ்டர் கிளாஸ் 2022 – தாணு, பார்த்திபன் வாழ்த்து

பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளின் முன்னிலையில் சிறப்பு பிரமுகர்களின் முன்னிலையில் ஏவிஎம்-யின் மாஸ்டர் கிளாஸ் 2022 என்ற அற்புதமான விழா தமிழ் தாய் வாழ்த்து மற்றும் குத்து விளக்கு ஏற்றுதலுடன் தொடங்கியது   அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர். என். பூமா வரவேற்றார், அதைத் தொடர்ந்து செயலாளரும், தாளாளரு மான    விஎம் கே சண்முகம்  தலைமை  உரை நிகழ்த்தினார்.

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.  பின்னர் அவர் பேசும் போது தன்னுடன் உதவியாளராக பண்புரிய  4 மாணவர் களுக்கு வாய்ப்பு தருவதாக தெரிவித்தார்.

,பின்னர் தேசிய விருதை வென்றதற்காஅ இசை அமைப்பளர்  கலைமாமணி டி.இம்மானுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது.   அவர் பேசும்போது, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

அசுரன் படத்திற்காக தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர்  கலைப்புலி எஸ்.தாணு கவுரவிக்கப்பட்டார். அவர் பேசும்போது, ஏவிஎம்  உடனான தனது பிணைப்புகளை. நினைவு கூர்ந்தார்.

சிறப்பு அழைப்பாளர்களான பிலிம்சேம்பர்  செயலாளர் . ரவி கொட்டாரக்கரா கலந்து கொண்டு, ஒரு படத்தை அதன் கரு நிலையில் இருந்து எப்படி உருவாக்குவது என்பது குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அவரை தொடர்ந்து  பிலிம்சேம்பர் தலைவர் காட்ரகட்டா பிரசாத், பட்ஜெட் படங்களை எப்படி தயாரிப்பது என்பது பற்றி விளக்கினார்.

பஹவான் சைபர்டெக்கின் சிஓஓ மற்றும் எத்திராஜ் குழும நிறுவனங்களின் முன்னாள் தலைவரான  வி.எம்.முரளி தரன், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது ஊடகம் மற்றும் சினிமாவை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து உரையாற்றி னார்.

இந்நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் .தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரியாலிட்டி ஃபிலிம் மேக்கிங் பற்றி பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தினார் இயக்குனர் பாண்டிராஜ்

தொடர்ந்து பாண்டியராஜ்.,  அனுப் சந்திரசேகரனின் மாணவர்களுடன் கலந்துரையாடல்  நிகழ்ச்சியை நடிகர், சித்ரா லக்ஷ்மணன் நடத்தினார்.

வனவிலங்கு திரைப்பட தயாரிப்பாளர் சுப்பையா நல்லமுத்துவின் மாஸ்டர் கிளாஸில் பார்வையாளர்கள் கலந்து கொண்டதோடு நாள் நிறைவு பெற்றது.

பார்வையாளர்களுக்கு உலகின் மிகவும் பிரபலமான மற்றும் தேசிய விருது பெற்ற புலி – மச்லி ஆவணப்படம் திரையிடப் பட்டது.  பின்னர் பார்வையாளர்களுடன் கேள்விகளுக்கு பதில்      நிகழ்ச்சி நடந்தது.

சுப்பையா தனது படப்பிடிப்பின் போது படமாக்கப்பட்ட  சில பிரத்யேக கிளிப்களையும் திரையிட்டார்.

Related posts

வாட்ச் (பட விமர்சனம்)

Jai Chandran

முத்துநகர் படுகொலை’- வட இந்தியாவில் திரையிட மேதா பட்கர் முடிவு

Jai Chandran

ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் 550 தியேட்டரில் நாளை ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend