Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.81-ஆக சரிந்துள்ளது. இன்னும் வீழ்ச்சி இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் அச்சமூட்டுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்று மத்திய அரசும், பாஜகவினரும் கூறுவது பொய் என்பதை இது நிரூபித்துள்ளது.

2013-ல் டாலர் மதிப்பு ரூ.60-க்கும் குறைவாக இருந்தபோது, “வீக்கான பிரதமர் ஆட்சியில் ரூபாயின் மதிப்பும் வீக்காகத்தாதான் இருக்கும்” என்று விமர்சனம் செய்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, இந்த வீழ்ச்சிக்கு என்ன பதில் கூறுவார்? இந்த சரிவு உடனடியாக பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளது.

மேலும், வர்த்தகமும் பாதித்து, பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளால் பரிதவிக்கும் பொதுமக்கள், இன்னும் எத்தனை இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ? இலங்கையின் நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் மத்திய அமைச்சர்களே!

Related posts

Nenjukku Neethi Mourning Latha Mangashkar

Jai Chandran

Mithun Chakravarthi directorial New Love Story

Jai Chandran

Shanthnu Bhagyaraj Starrer Raavana Kottam

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend