Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குஷ்பூ மகள் தயாரிக்கும் “டபுள் ஆக்குபன்சி” பட விழா..

*டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

கிரியேட்டிவ் புரடியூசர் ஆனந்திதா சுந்தர் அவர்கள் பேசும்போது, நான் இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணி புரிந்துள்ளேன். இந்த படக் குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். ஏசி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள். அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம். இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குனர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் அதுவாக அமையும் என்று சொல்வார்கள். அது போல் எங்களுக்கு இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அமைந்துள்ளனர். அவர்கள் இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக படம் அமைந்திருக்காது. அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படம் அனைவரது கனவு. கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள்.

பகவதி பெருமாள் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அவ்னி மூவிஸில் எனக்கு இது இரண்டாவது படம். இந்த கதையை முதல் முறை கேட்கும் போது மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அடுத்த ஜெனரேஷனுக்கான கதை சொல்லல் ஆரம்பமாகி இருக்கிறது என்று உணர்ந்தேன். நிறைய கடின உழைப்பில் இந்த படத்தை எடுத்து உள்ளோம். சாம் சிஎஸ் அவர்களின் இசையில் முதல்முறையாக நடித்துள்ளேன். நன்றி

ரேஷ்மா வெங்கடேஷ் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். குஷ்பு மேடம் அவர்களுக்கு மிகவும் நன்றி. இயக்குனர் அஸ்வின் கந்தசாமி மிகவும் திறமையானவர். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இது ஒரு ஒன்றரை வருட பயணம். இவர்கள் அனைவருடனும் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷ் அவர்களை பார்க்கும்போது அவருக்கு இது முதல் படம் போல தெரியவில்லை. பிரியா என்ற கதாபாத்திரத்தில் சாம்யுக்தா சிறப்பாக நடித்துள்ளார். வினோத் கிஷனுடன் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். சாம் சிஎஸ் அவர்களின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், எடிட்டர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் அந்த கதாபாத்திரம் பிடிக்கும் என்று நம்புகிறேன். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சப்போர்ட் என்றும் வேண்டும்.

சாம்யுக்தா விஸ்வநாத் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் ஆனது. குஷ்பு மேடம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவ்னி மூவிஸ் வித்தியாசமான கதைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்கள் முதல் முறையாக கதை சொல்லும்போது நான் படத்திற்கு உள்ளே வந்து விட்டேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தோஷ் உடன் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேஷ்மாவை நான் சிரிக்காமல் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அதிகம் பேசியுள்ளோம். இந்த படத்தில் எனக்கு பின்னால் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எங்களுக்கு சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.

நடிகர் சந்தோஷ் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். ஆனந்திதா சுந்தர் அவர்களை எனக்கு பள்ளியிலிருந்து தெரியும். அவர் எனது சிறந்த நண்பர். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கு மிகப்பெரிய நன்றி. குஷ்பு மேடம் அவர்களுக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பில்லர் ஆக இருந்துள்ளார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு அண்ணன் போல. அவர் வைத்திற்குக்கும் கதைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவரால் எந்த ஒரு ஹீரோவிடமும் சென்று கதை சொல்ல முடியும். ஆனால் என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் உழைப்பு மிகப் பெரியது. அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்துள்ளோம். VFX டீம் அருமையான வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த குறைந்த நேரத்திலும் சிறப்பாக பணி புரிந்துள்ளார்கள். ஸ்ருதி அவர்கள் என்னை மிகவும் அழகாக காண்பித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையில் அதிரடி ஆக்சன் கதைகள் தான் பார்த்திருப்போம். இது ஒரு வித்தியாசமான படமாக அவரது இசையில் இருக்கும். பக்ஸ் சார் அவர்களுடன் ரிகர்சல் செய்துவிட்டு நடிப்பது மிகவும் பிடிக்கும், அது சுவாரசியமாகவும் இருக்கும்.

வினோத் அவர்களை நீண்ட வருடமாக தெரியும். இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். ரேஷ்மா கதாபாத்திரத்தை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். ஒரு சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார். சாம்யுக்தா அவர்கள் எனக்கு ஒரு முதுகெலுமாக இந்த படத்தில் இருந்துள்ளார்கள். அவருடைய பெர்பாமென்ஸை விட்டுவிட்டு நான் நன்றாக நடிப்பதற்கு உதவினார்கள். அவர்களுடைய அன்புக்கு மிகப் பெரிய நன்றி. பிருந்தா மாஸ்டர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கடவுள் மாதிரி. எனக்கேத்த ஸ்டைலை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் கொரியோகிராபி செய்துள்ளார்கள். சுந்தர் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதைக்கு ஓகே சொன்னதற்கு நன்றி. கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். உங்கள் அனைவரையும் என்டர்டைன்மென்ட் செய்யும் விதமாக தான் இனி வரும் படங்களில் நடிப்பேன். என்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் அவர்கள் பேசும்போது, தினேஷ் குமார் அவர்கள் தான் இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். குஷ்பு மேம் மற்றும் சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் போது எனது அப்பா அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்கள். அப்போது குஷ்பூ மேடம் நீ எப்போது சரி ஆகி வருவாயோ அப்பொழுது ஷூட்டிங் போலாம் என்று சொன்னார்கள். அதற்கு நான் எப்போதும் நன்றி கடனாக இருப்பேன். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன சொன்னாலும், சலிக்காமல் சொன்னதை செய்தார்கள். என்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி

இயக்குனர் அஸ்வின் கந்தசாமி அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நான் ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ஸ்டேஜில் பேசுவது இதுதான் முதல் முறை. இந்த மேடையில் ஏற வைத்த குஷ்பூ மேடம் அவர்களுக்கு நன்றி. மேடையில் ஏறி என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுத்த சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. அவரது வாழ்க்கையில் நடந்த பலவற்றை எனக்கு சொல்லி இருக்கிறார். படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. சாம் சிஎஸ் அவர்களின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. VFX டீமை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். படத்தில் VFX காட்சிகள் அதிகமாக இருக்கும். என்னுடைய முதல் படத்திலேயே பிருந்தா மாஸ்டர் அவர்களுடன் வேலை செய்வது மிகப்பெரிய பெருமை. எனக்கு இது முதல் படம் என்ற உணர்வை யாரும் கொடுக்கவில்லை. இந்த படத்தை முதலில் ஒரு ஷார்ட் பிலிம் ஆக எடுக்க திட்டமிட்டோம். பிறகுதான் படமாக மாறியது. சந்தோஷ் தான் முதலில் இதனை ஒரு படமாக எடுக்கலாம் என்று சொன்னார். எனக்கு முழு கான்பிடண்ஸ் கொடுத்தது அவர்தான். இந்த படத்திற்கான கதாநாயகியை தேர்வு செய்ய மிகவும் சிரமப்பட்டோம். ரேஷ்மா அவர்கள் இந்த படத்திற்காக நான் கேட்டது, கேட்காதது அனைத்தையும் கொடுத்தார். வினோத் கிஷன் இந்த படத்திற்கு பிறகு ஆக்சன் படங்களை பண்ணுவதை தவிர்ப்பார் என்று நம்புகிறேன். படத்தின் செட் ஒர்க் மிகவும் சிறப்பாக இருந்தது. ஏசி சண்முகம் சார் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுடைய கனவு. பத்திரிகையாளர்கள் அனைவரின் சப்போர்ட்டும் எங்களுக்கு வேண்டும்.

குஷ்பு அவர்கள் பேசும்போது, இந்த டீம் மிக முக்கியமான டீம். இது ஒரு நல்ல ஒரு ராம்-காம் படம். சில நேரங்களில் இது போல ஒரு டீம் அமையும். இது கடவுள் எழுதி வைத்த கனெக்சன். அவர் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார். சந்தோஷம், ஆனந்திதாவும் பள்ளியிலிருந்து நண்பர்கள். ஆனால் பள்ளி காலத்தில் இருவருக்கும் ஆகாது. ஆனால் இப்போது காலை முதல் மாலை வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு பையன் கிடையாது, ஆனால் சந்தோஷ் போன்ற ஒரு அழகான பையன் எனக்கு கிடைத்துள்ளார். சந்தோஷ் மற்றும் ஆனந்திதா தான் இந்த கதையை கொண்டு வந்தார்கள். அப்போதுதான் அஸ்வின் கந்தசாமி வந்தார்கள். முதல் முறை கதை சொல்லும் போது எனக்கு பிடித்து விட்டது. இந்த படத்தில் காமெடி, எமோஷனல் அனைத்தும் இருக்கிறது. இது போன்ற கதையை நான் சமீபத்தில் கேட்கவில்லை. சந்தோஷை அவ்னியில் அறிமுகப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஒரு தாய்க்கு எந்த அளவுக்கு பெருமை இருக்குமோ அந்த அளவிற்கு எனக்கும் பெருமை உள்ளது. அவரிடம் அந்த ஃபேஷன், வெறித்தனம் என அனைத்தும் உள்ளது. அஸ்வினிடம் நிறைய கான்ஃபிடன்ஸ் உள்ளது. என்னுடைய படம், அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது. இயக்குனருக்கு பிரீடம் கொடுக்க வேண்டும், அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று சுந்தர் சொன்னார்கள். சம்யுக்தா பிரியா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

ரஜினி கதாபாத்திரத்திற்கு நிறைய பேரை தேர்வு செய்தோம். ரேஷ்மாவுக்கு நன்றிகள். நான் லொகேஷனுக்கு கூட போனதில்லை. சிவி சண்முகம் சார் அவர்களுக்கு எங்களது மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்னுடைய மகள் இந்த படத்தில் ஒரு கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக அறிமுகமாகிறார். பொன்னியின் செல்வன் 2 படத்திலும் வேலை பார்த்தார். ஆனால் அவரது பெயரை போட மறந்து விட்டார்கள். இந்த படத்தில் அவருடைய பெயரை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக உள்ளது. அவர்களுக்கு ஒரு புரொடியூசர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனந்திதாவிற்கு அவரது அப்பா போல வேலை செய்ய வேண்டும். ஒரு வேலையை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தேடுவார்கள். இந்த மேடையில் அவரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கு. இன்றைய ஜெனரேஷனிடம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. டபுள் ஆக்குபன்சி படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும். வெளியில் வரும்போது நிச்சயம் கண் கலங்கி வருவீர்கள்.

 

*நடிகர்கள்:*
சந்தோஷ்
ரேஷ்மா வெங்கடேஷ்
சாம்யுக்தா விஸ்வநாத்
வினோத் கிஷன்
வி.டி.வி கணேஷ்
பகவதி பெருமாள் (பக்ஸ்)

*தொழில்நுட்பக் குழு:*
இயக்கம்: அஸ்வின் கந்தசாமி
தயாரிப்பாளர்கள்: ஏ.சி.எஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ்பூ சுந்தர் (அவ்னி மூவீஸ்)
CEO: ஆர். மதன் குமார்
கிரியேட்டிவ் புரொடியூசர்: ஆனந்திதா சுந்தர்
இசை: சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: சந்தகுமார் சக்ரவர்த்தி
படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி
கலை இயக்கம்: செந்தில் ராகவன்
ஆடை வடிவமைப்பு: ஸ்ருதி ஆர். கண்ணன்
தயாரிப்பு நிர்வாகத் தலைவர்: என். மணிவண்ணன்
தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி
VFX: ஸ்டுடியோ ஹெட் – ஃபாசில் முகமது எஸ் (பிக்சல் லைட் ஸ்டுடியோ)
கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர் (நாக் ஸ்டுடியோஸ்)
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி – எஸ். அழகியகூத்தன்
ஒலி கலவை: சுரேன் ஜி (ஹம் ஆடியோ)
புகைப்படம்: வி. ராஜன்
மேக்கப்: என். செல்லதுரை
விளம்பர வடிவமைப்பு: வியாகி
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத்
பாரஸ் ரியாஸ்
கிரியேட்டிவ் புரொமோஷன்ஸ்: கச்சா மேங்கோ
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: பீட்ரூட்
ஆடியோ லேபிள்: சரீகமா இந்தியா லிமிடெட் (RPSG குழுமம்)

Related posts

‘நானி 31’ படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா

Jai Chandran

ஆரியன் (பட விமர்சனம்)

Jai Chandran

மாநாடு ஷூட்டிங்கில் விவேக் நினைவாக மரம் நட்ட சிம்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend