Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

தேஜா சஜ்ஜாவின் ‘மிராய்’ ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியீடு !

சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டமநேனி, டி.ஜி. விஷ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து வழங்கும் பான் இந்தியத் திரைப்படம் “மிராய்” ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்திய சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, சூப்பர் ஹீரோ ஜானரை முற்றிலும் மறு வரையறை செய்யும் முனைப்பில் இருக்கிறார். தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “ஹனுமேன்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் அடுத்த பெரிய முயற்சியான “மிராய்” படத்திலும் மக்களை மயக்கத் தயாராகி வருகிறார். இந்த பான் இந்தியா ஆக்ஷன்-அடைவேஞ்சர் படத்தில் தேஜா சஜ்ஜா, சூப்பர் யோதா என்ற மாபெரும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார், இந்தப்படம் சூப்பர் ஹீரோ ஜானரை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும். இப்படத்தை கார்த்திக் கட்டமநேனி இயக்க, பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் சார்பில் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான் இந்தியா திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் 8 மொழிகளில், 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியிடப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தினம் ஆகிய விடுமுறைகளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில், இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டரில், தேஜா சஜ்ஜா பனியால் மூடப்பட்ட மலைச் சிகரங்களின் நடுவில் நின்று, ஒரு இரும்பு கம்பியைப் பிடித்தபடி ஆழமாகப் பார்க்கும் தோற்றம், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

“மிராய்” படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் மனோஜ் மஞ்சு வில்லனாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் மிக வலுவானதாகவும், மனதில் நிற்கக்கூடியதுமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரித்திகா நாயக் படத்தின் நாயகியாக, தேஜா சஜ்ஜாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

தேஜா சஜ்ஜாவின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு படம் தொடங்கும் முன்பிருந்தே வெளிப்பட்டு வருகிறது. அவர் சூப்பர் யோதா கதாபாத்திரத்தைத் திரையில் உயிர்ப்புடன் கொண்டுவர முழு அர்ப்பணிப்புடன் உழைப்பை கொட்டி வருகின்றார். இயக்குநர் கார்த்திக் கட்டமநேனி மிகுந்த கவனத்துடன் புதிய உலகத்தை உருவாக்கி வருகின்றார்.

கார்த்திக் கட்டமநேனி படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை ஆகியவற்றைக் கையாளுவதோடு, மணிபாபு கரணம் உடன் இணைந்து வசனங்களையும் எழுதியுள்ளார். கௌரா ஹரி இசையமைக்க, ஸ்ரீ நகேந்திர தங்காலா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விவேக் குசிபோட்லா இணை தயாரிப்பாளராகவும், சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் 8 மொழிகளில், 2D மற்றும் 3D வடிவங்களில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது “மிராய்’

நடிப்பு:

சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா
வில்லன் மனோஜ் மஞ்சு
நாயகி ரித்திகா நாயக்
“மிராய்” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொழில்நுட்பக் குழு:
இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி
தயாரிப்பாளர்: டிஜி விஸ்வ பிரசாத்
பேனர்: பீப்பிள் மீடியா பேக்டரி
எழுத்து: மணிபாபு கரணம்
இணை தயாரிப்பாளர்: விவேக் குச்சிபோட்லா
நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி
இசை: கௌரா ஹரி
கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Related posts

தேவரின்113வது குருபூஜை டி.ராஜேந்தர் மலர்கள் தூவி மரியாதை

Jai Chandran

கபில்தேவ் வாழ்க்கை படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜீவா

Jai Chandran

நவ-12 காலை 7 மணியிலிருந்து டைகர் 3

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend