தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்க கவுரவ ஆலோசகர் டி.ராஜேந்தர், தலைவர் உஷா ராஜேந்தர், செயலாளர் ஜி எஸ் கே சதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,:
திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி!
LBT (Local Body Tax)-யை ழுழுமையாக ரத்து செய்ய கோரிக்கை..
வணக்கம்.
இந்த கொரோனா பேரிடர் காலங்களில் திரைத்துறை தொழிலாளர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவர்களின் வலிகளையும், வேதனை¬யும் உணர்ந்து திரையரங்களை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
அதே நேரத்தில் திரைத்துறையில் பல ஆண்டுகளாக LBT (Local Body Tax)-யை ழுழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். கடந்த அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களது கோரிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு LBT (Local Body Tax)-யை ழுழுமையாக ரத்து செய்து திரைத்துறையினருக்கு மறுவாழ்வு அளித்து உதவிட வேண்டுமாறு அன்புடன் கேட்டுகொள் கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.