Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஈரோடு கிழக்கு தேர்தல் சரத்குமார் நிலைப்பாடு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஈ ரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலைப்பாடு குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார வெளியிட்டுள்ள அறிக்கை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப் பாடு குறித்து நேற்று காலை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடந்ததை அறிவீர்கள்.

மேலும், நேற்று மாலை உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து, முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட் டுள்ளது. எந்த கட்சியினருக்கும், யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முன்னோடிகளும், சகோதர, சகோதரிகளும் தொடர்ந்து மக்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.

Related posts

NETFLIX LAUNCHES THE TRAILER OF NAVARASA

Jai Chandran

First Look of Vimal’s VetriKondaan

Jai Chandran

Myyal presents an intricate tale of love- Director Elumalai

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend