Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் மனதை தனது ஈர்ப்பான  இலக்கிய பேச்சால் கவர்ந்தவர் நெல்லை கண்ணன் (வயது 77).

கடந்த  சில நாட்களாக உடல் நலம்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வநதார். இந்நிலையில் அவர்  தனது வீட்டில் இன்று காலமானார்.

நெல்லை டவுனை சேர்ந்தவர் கண்ணன்.  தமிழ் இலக்கிய பேச்சாளர்.  தமிழ் அறிஞரான இவர் பல்வேறு நிகழ்ச்சியில்  பட்டிமன்ற நடுவராக இருந்துள் ளார்.  பகவத் கீதையை மிகவும் பக்தி பரவசத்துடன் பிரசங்கம்போல் செய்து புகழ் பெற்றதுடன்  பன்முகதன்மை கொண்டவராக. திகழ்ந்தார்.

காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கர்மவீரர் காமராஜர் மீது தீராத பற்று கொண்டவர்.  கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்த நெல்லை கண்ணன் . குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத மேடைகளாக  மாற்றியவர் நெல்லை கண்ணன். சமீபத்தில்  இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை  பெற்றார்.

நெல்லை கண்ணன்  உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள்,, தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள்   அஞ்சலி செலுத்தி வருகின்றனர.

நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது:

பிரபல பேச்சாளரும், முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மறைவு வருத்தமளிக்கிறது விசிக விருது விழாவில் என்னிடம் வாஞ்சை யொழுக அன்பு பாராட்டி பேசியதை நினைந்து நெஞ்சம் நெகிழ்கி றேன்.நெல்லை கண்ணனை இழந்து தவிக்கும் குடும்பத்தி னருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு  முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Related posts

ஒ மணப் பெண்ணேவில் ஹரிஷுடன் நடித்த அனுபவம் பகிர்ந்த பிரியா பவானி

Jai Chandran

அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை: கமல் குரல்

Jai Chandran

Dulquer Salmaan unveil rocking Lucky Baskhar Title Track

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend