Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தமிழ் ராக்கர்ஸ் (வெப் சீரிஸ் விமர்சனம்)

படம்: தமிழ் ராக்கர்ஸ் (வெப் சீரிஸ்)

நடிப்பு: அருண் விஜய், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், அழகம் பெருமாள், எம்.எஸ். பாஸ்கர், வினோதினி, ஜி.மாரிமுத்து, தருண் குமார், வினோத் சாகர், சரத் ரவி, ஜானி காக்கா முட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அஜித் ஜோஷி

தயாரிப்பு: ஏவி எம் புரடக்‌ஷன் அருணா குகன், அபர்ணா குகன் ஷியாம்

இசை: விகாஷ்

ஒளிப்பதிவு : ஆர்.ராஜசேகர்

இயக்கம்: அறிவழகன்

ரிலீஸ்: சோனி லைவ் ஒரிஜினல் ஒ டி டி

பி. ஆர் ஒ: ரியாஸ் அஹமத்

தமிழ் திரையுலகை அழிக்கும் அரக்கனாக விளங்கும் தமிழ் ராக்கர்ஸ் என்ற திருட்டு விசிடி ஒளிபரப்பும் ஆன்லைன் வெப் சைட் எப்படி நடக்கிறது. அதனால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்கள் நிலை பற்றி உண்மைகளை உடைத்துப் பேசும் வெப் சீரிஸாக உருவாகியிருக் கிறது தமிழ் ராக்கர்ஸ்

அதிரடி ஸ்டார் ஆதித்யா நடிக்கும் 300 கோடி செலவிலான கருடா என்ற படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் தயாராகி வருகிறது. அந்த படத்தை வெளியிட தேதி அறிவிக்கப்படு கிறது. ஆனால் தமிழ் ராக்கர்ஸ் கூட்டம் அந்த படத்தை ரிலீஸ் தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஆன்லைனில் வெளியிடு வதாக சவால் விடுகிறது. இதனால் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. போலீஸ் தேடுதல் வேட்டை நடத்த ருத்ரா (அருண் விஜய் ) தலைமையில் தனிப் படை அமைக்கிறது . இதற்கிடையில் ருத்ராவின் மனைவி நடத்தி கொல்லப்படு கிறார். தமிழ் ராக்கர்ஸ் கூட்டம்தான் தன் மனைவியைசயும் கடத்தி கொன்றிருக்கிறது என ருத்ரா எண்ணுவதால் தமிழ்ராக்கர்ஸ் டீமை பிடித்து அழிப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறார். அவரால் அதை நிறை வேற்ற முடிந்ததா என்ப தற்கு பரப்பாகவும், உருக்கமாகவும் இத்தொடர் பதில் அளிக்கிறது.

சினிமா துறை சம்பந்தப்பட்ட கதை என்பதால் இதில் வரும் பாத்திரங்களும் சில பிரபல நடிகர்களை யூகிக்கும்படியாக கதா பாத்திரங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. குறிப் பாக அதிரடி ஸ்டார் ஆதித்யா அவரது தந்தை பாத்திரம் எஸ்.ஏ.சந்திர சேகர், விஜய் இருவரை யும் நினைவுக்கு கொண்டு வருகிறது.
அதிரடி ஸ்டராக நடித்திருப்பவரின் முகத்தை ஒருமுறை கூட நேரடியாக தெளிவாக இயக்குனர் காட்ட வில்லை. அவரது தோற்றத்தை முதுகுபக்க மாகவும், பக்கவாட்டிலும் காட்டும்போது அசல் விஜய்யின் தோற்றம் போலவே தெரிகிறது.

தமிழ்ராக்கர்ஸை பிடிக்கும்பொறுப்பை ஏற்கும் அருண்விஜய் சினிமா பிடிக்காத போலீஸாக நடித்திருக் கிறார்.

தமிழ்ராக்கர்ஸ் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அருண் விஜய் நெருங்குவது விறுவிறுப்பு.

தயாரிப்பாளர் அழகம் பெருமாள் உள்ளிட்ட ஒவ்வொருவரையும் அருண் விசாரிப்பதில் அவசரம் காட்டாமல் நிதானமான நடைமுறை களை கையாள்வதும் ஒரு கட்டத்தில் பர்மா பஜாரில் கைதாகும் கடைக்காரர் ஒருவரிடம் போட்டோவை காட்டி விசாரித்து அந்த கூட்டத்தை அடையாளம் காண்பதும் காட்சியை சூடுபிடிக்க வைக்கிறது.

கிளைமாக்ஸில் அசல் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி எதிரி கூட்டத்திடம் அருண் விஜய் மோதி தனது ஹீரோயிசத்தை தக்க வைக்கிறார்.

ரசிகர்களை தயாரிப் பாளர்களும், நடிகர்களும் எப்படி தங்களது புகழுக் காக பயன்படுத்து கிறார்கள் என்பதை இயக்குனர் அறிவழகன் அப்பட்டமாக காட்டி கண்மூடித்தனமான ரசிகர்களின் கண்களை திறந்திருக்கிறார்.

“ஏன்டா, நடிகரை அண்ணன்னு சொல் றியே அந்த அண்ணன் உனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டுவாரா” என்று மாரி முத்து தன் மகனிடம் கேட்கும்போது சிந்திக்க வைக்கிறார்.

ஐஸ்வர்யா மேனன் அருண் விஜய் மனைவி யாக சீண்டல் சிணுங்கல் காட்டி நடித்திருக்கிறார்.

சைபர் கிரைம் துறையில் வேலை பார்க்கும் வாணி போஜன் அருண் விஜய்யின் அசிஸ்டன்ட் போல் மாறிவிடுகிறார்.

சைபர் கிரைம் அதிகாரி யாக வரும் வினோதி குரல் உயர்த்தி பேசி கவனத்தை ஈர்க்க
கிறார்.

சினிமா தயாரித்து தமிராக்கர்ஸால் போண்டியான தயாரிப் பாளராக வரும் எம் எஸ்.பாஸ்கர் தன் வாழ்க்கை தெருவுக்கு வந்ததற்கு தமிழ் ராக்ர்ஸ்தான் காரணம் என்று சொல்லி அழும் போது மனதை நெருடு கிறார்.
அதேபோல் 300 கோடி பட்ஜெட் பட தயாரிப்பாள ராக வரும் அழகம் பெருமாள் வெப் சீரிஸ் முழுக்க ஆக்ரமிக்கிறார்.

தருண்குமார், வினோத் சாகர், சரத் ரவி, ஜானி காக்கா முட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அஜித் ஜோஷி ஆகியோரும் மிகை இல்லாமல் நடித்து அந்தந்தபாத்திரங்க ளாக மாறியிருக்கின் றனர்.

ஏவி எம் புரடக்‌ஷன் அருணா குகன், அபர்ணா குகன் ஷியாம் தயாரித்திருக்கின்றனர்.

விகாஷ் இசை,
ஆர்.ராஜசேகர் ஒளிப் பதிவும் கைவண்ணத் தை காட்டியிருக்கிறார் கள்.
இப்படியொரு கதை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோறியதற் காகவே இயக்குனர் அறிவழகனை பாராட்டலாம். தமிழ் ராக்ர்ஸ் பற்றி பல வதந்திகள் கோடம்பாக் கத்தில் உலவுகின்றன. அது உண்மையா, பொய்யா என்ற கேள்விகளுக்கு
விடை கிடைப்பதில் துணிச்சலாக பேசுவதில் இயக்குனருக்கு சில தயகங்கள் இருப்ப தையும் உணரமுடிகிறது.

எட்டு எபிசோடாக உருவாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸின் வெப் சீரிஸ் அடுத்ிரண்டாம் பாகத்துக்கும் அடிபோட்டு விட்டு கிளைமாக்ஸ் முடிகிறது.

தமிழ்ராக்கர்ஸ்- இது முடிவில்லாத சிலந்தி வலை.

Related posts

உண்மை சம்பவங்களுடன் பூசாண்டி வரான்

Jai Chandran

UZHAVAN FOUNDATION’S UZHAVAR VIRUDHUGAL 2024

Jai Chandran

Nandamuri Balakrishna Completes Dubbing For Aganda2

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend