Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆக்ஸிஜன் உற்பத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு கண்காணிப்பு குழு: அரசு நியமனம்

கொரோனா 2வது அலைஅ அதிதீவிரமாக இந்தியா முழுவதும் பரவிய நிலையில் அரசு மருத்துமனையில் மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சாரை சாரையாக அனுமதிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டத்து இதனால பலர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் தொட்ரபட்ட வழக்குல் உடனடியாக ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்து தடையில்லாமல ஆக்ஸிஜன வழங்கி உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கடுமையாக உத்தரவிட்டது.
இந்நிலையில் தூத்துகுடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அதை இலவசமாக விநியோகிக்க தயார் என வேதாந்தா நிறுவன்ம் சுபரீம் கோர்ட்டில் கூறியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது, நச்சு பரப்பும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக் கக்கூடாது என்று தூத்துக்குடி மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை திறந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதுபற்றி உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட்டது. அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஆலோசித்ததில் 4 வார காலத்துக்கு ஆக்ஸிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிக்கலாம், அதனை கண்காணிக்கு குழு நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தகவல் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று 4 வார காலத்துக்கு ஆக்ஸிஜன் தயாரிக்க உத்தரவிட்டது.
தற்போது கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட ஆணையில் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித் தது. அதன் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் ஆலையை வரும் ஜூலை 31-ந் தேதி வரை தற்காலிகமாக இயக்க அனுமதித்து அரசு உத்தரவிடு கிறது.
அங்குள்ள ஆக்சிஜன் ஆலை தவிர வேறு எந்தவொரு ஆலையும் இயக்கப்படாமல் மூடப்பட்டு இருப்பதை தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியத் தலைவர் உறுதி செய்ய

மேலும், ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவு முழுமையாக செயல் படுவதை கண்காணிப்ப தற்கான குழுவை நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியதன் அடிப் படையில் அதற்கான குழுவை நியமித்து அரசு உத்தரவிடு கிறது.
6 பேர் கொண்ட அந்த குழு வின் தலைவராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செயல் படுவார். அந்த மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டு, தூத்துக் குடி சப்-கலெக்டர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தூத்துக்குடி அனல் மின்சார நிலையத்தின் (டான்ஜெட்கோ) துணைத் தலைமை வேதியிய லாளர் ஜோசப் பெல்லாரிமின் ஆண்டன் சோரிஸ், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நியமனம் செய்யப்படும் 2 சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள்.

இந்த கண்காணிப்புக் குழுவுக்கு சில அதிகாரங்கள் அளிக்கப்படுகின்றன. அதன்படி, இக்குழு பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில்தான் ஆக்சிஜன் ஆலையை வேதாந்தா நிறுவனம் மேலாண்மை செய்ய வேண்டும். அப்போது பாது காப்பு மற்றும் சுற்றுச் சூழல் விதிமுறை களைப் பின்பற்ற வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றி ஆக்சிஜன் ஆலை இயக்கப்படுகிறதா என்பதை இந்தக் குழு மேற்பார்வை செய்யும். ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் ஆலையின் மேலாண்மை ஆகியவற்றுக்கு மட்டும் எத்தனை பேர் அந்த ஆலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை இந்த குழு முடிவு செய்யும்.
ஆக்சிஜன் ஆலையை இயக்கு வதில் ஏதாவது இயற்கை தொடர்பான குறைபாடுகளை அந்தப் பகுதியில் குடியிருப் போர் யாராவது கூறினால், அதை இந்தக் குழு கவனிக்க வேண்டும். ஆலையில் இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு குறித்த ஆய்வை நடத்தி, அதை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் 15 நாட் களுக்கு ஒருமுறை அரசுக்கு கண்காணிப்புக் குழுவின் தலைவர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட ஆணையில் கூறி உள்ளார்.

Related posts

Dil Raju & Adityaram announces Ram Charan’s Game Changer

Jai Chandran

Meera Jasmine enters the world of social media

Jai Chandran

மோகன் பிறந்த நாள்: பெண்களுக்கு பிரியாணி விருந்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend