Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எனக்கு தொழில் ரொமான்ஸ் ( பட விமர்சனம்)

படம்: எனக்கு தொழில் ரொமான்ஸ்

நடிப்பு: அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம்பெருமாள், எம் எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி,

தயாரிப்பு: எம். திருமலை

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு: கணேஷ் கே சந்திரா

இயக்கம்: பாலாஜி கேசவன்

பி ஆர் ஒ :சதீஷ் (AIM)

சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறார் அசோக் செல்வன். அவருக்கும்  மருத்துவமனை ஒன்றில்  நர்சாக பணிபுரியும் அவந்திகாவுக்கும் காதல் மலர்கிறது. இதற்கிடையில் அசோக் மீது தீராத சந்தேகம் எழ அவரது காதலை  உதறுகிறார் அவந்திகா. என்ன நடந்தது என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

90ஸ் காலகட்ட  பாணியிலான காதல் கதை.

அசோக்செல்வனுக்கு பெரிசா வேலையில்லை. ஹீரோயின் அவந்திகா பின்னால் சுற்றுகிறார். சூடாக இரண்டு மூன்று முறை லிப் டூ லிப் கிஸ் அடித்து இளசுகளை சூடேற்றுகிறார்

அவந்திகா அழகு பதுமையாக மின்னுகிறார். அவருக்கும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டிய வேலை எதுவும் இல்லை.  சொல்லப்போனால் யாரையும் கஷ்டப்படவைக்காமல் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.

ஊர்வசியை இன்னும் கூட  காமெடிக்கு பயன்படுத்தியிருக்கலாம். டாக்டராக கெஸ்ட் ரோலில் வரும் எம். எஸ்..பாஸ்கர் சிரிக்க வைக்கிறார்.  படத்தில் இன்னும் சில சுவாரஸ்யங்கள் இருக்கிறது அதை சொன்னால் ஸ்பாய்லர் லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்கள். படம் பார்ப்பவர்களுக்கு அந்த சஸ்பென்சும் ஓபன் சஸ்பென்ஸ்சாகத்தான் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும்  கேரக்டர்களுக்குத்தான் அது சஸ்பென்ஸ்.

எம் திருமலை தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா. ஒளிப்பதிவு பளீர்.

நிவாஸ் கே பிரசன்னா இசை 90ஸ் காலகட்டத்தை ஞாபகப்பயடுத்துகிறது.

பாலாஜி கேசவன் அதிக அலட்டல் இல்லாமல் ஒரு ஸ்வீட் லவ் ஸ்டோரி தந்திருக்கிறார்.

எனக்கு தொழில் ரொமான்ஸ் – எங்கேயோ பார்த்த ஞாபகம்.

Related posts

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’

Jai Chandran

சென்னையில் புதுமை இசை நிகழ்ச்சி RRR

Jai Chandran

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend