Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் ( பட விமர்சனம்)

படம்: லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ்

நடிப்பு: பரத், அனூப் கஹலித், விவியா சாந்த்,  அதில் இப்ராஹிம், அனுமோஹன்

தயாரிப்பு: அனூப் கஹாலித்

இசை: கைலாஸ் மேனன்

ஒளிப்பதிவு : சினு சித்தார்த்

இயக்கம்: சுனிஸ் குமார்

பி ஆர் ஒ: கே. குமரேசன்

கிரைம் த்ரில்லர் படங்கள் ஷார்ப்பாக, திரில்லாக இருக்க வேண்டும். அந்த வகையில் லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் ஷார்ப் அண்ட் த்ரில்.

அதில் இப்ராஹிம், விவியா மற்றும் சில நண்பர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும் வாழ்க்கையில் பெரிதாக கொள்ளை யடித்து செட்டிலாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். சின்னச் சின்ன திருட்டுக்கள் செய்யும் அவர்கள் ஒரு பங்களாவை விற்பதற்காக ரூ 30 கோடி வியாபாரம் நடப்பதாகவும் அதில் 20 கோடி பிளாக் மணி என்றும் அந்த தொகையை கொள்ளையடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்றும் விவியா சொல்கிறார். அந்த பணத்தை கொள்ளையடிக்க வருகின்றனர். பங்களாவுக்குள் நுழையும் அவர்கள் அங்குள்ள லாக்கரை தேடுகின்றனர். அப்போது எழும் சத்தத்தை கேட்டு உஷாராகிறார். பங்களாவிலிருக்கும் பரத்.  பரத்துக்கு பார்வை கிடையாது. ஆனாலும் நன்கு கேட்டும் திறன் இருப்பதால் சத்தம் வரும் திசைக்கு சென்று கொள்ளையடிக்க வந்த வர்களை அடித்து துவம்சம் செய்கி றார். ஒரு கட்டத்தில் அவர்களில் ஒருவரை சுட்டுக்கொள்கிறார். இந்த மோதலின் இறுதியில் வெல்வது யார்? என்பதையும், கொள்ளையடிக்க வந்தவர்களை  பரத்  சுட்டுக் கொல்வது ஏன்? என்பதற்கு சஸ்பென்சுடன் கூடிய கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

ஹாலிவுட் பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் சுனிஸ் குமார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பரத் நடித்து வெளிவரும் படம் . இந்த வேடத்துக் காக உடலை கட்டுமஸ்த் தாக்கி நடித்துள்ளார்.

பார்வையற்றவராக வரும் பரத் பங்களாவுக்குள் கொள்ளையர்கள் நுழைந்ததை அறிந்து அவர்களை தேடிச் செல்வதும் வசமாக சிக்கிய வரை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளும் போது அதிர்ச்சி பரவுகிறது.

கொள்ளையர்களாக நடித்திருக்கும் அதில் இப்ராஹிம், விவியா ,   அனூப் கஹாலித் சக நடிகர்கள் வேடத்தை கச்சிதமாக செய்திருக்கின்றனர். ஆனாலும் பார்வைற்ற பரத் தனி ஆளாக கொல்ல வரும் நிலையில் அவரை  கூட்டாளிகள்  எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தாக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல் பரத்திடம் விவியா ஒன்றுக்கு பலமுறை சிக்கிக் கொள்ளும்போது இவர் பரத்தின் கையாளாக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

அனூப் கஹாலித் தயாரித்திருக்  கிறார்.

இசை அமைப்பாளர் கைலாஸ் மேனன் பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கி றார். த்ரில் காட்சிகளில் இசையால் இன்னமும் பயமுறுத்தி இருந்தால் கூடுதல் பரபரப்பு கிடைத்திருக்கும்.

சினு சித்தார்த் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது. இருள் சூழ்ந்த காட்சியில் நடக்கும் பரத்தின் தேடுதல் வேட்டை படபடப்பை அதிகரிக்கிறது.

கொள்ளையர்களை பரத் தனது வளையில் சிக்க வைத்து கொல்வது ஏன் என்பதற்கு கிளைமாக்ஸ் நெருக்கத்தில் விளக்கம் அலிக்கும் போது சஸ்பென்ஸுக்கு இயக்குனர் சுனிஸ்குமார் பதில் தருவது தெளிவு.

லாஸ்ட் சிக்ஸ்  ஹவர்ஸ் – ஹாலிவுட் சாயலில் ஒரு தமிழ் படம்.

Related posts

விஷால் அம்மாவிடம் திட்டு வாங்கிய ஸ்டன்ட் இயக்குனர்: லத்தி டீஸர் விழாவில் ருசிகரம்

Jai Chandran

தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்*

Jai Chandran

அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் நயன்தாரா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend