Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சுழல் தி வோர்டெக்ஸ் (வெப் சீரிஸ் விமர்சனம்)

படம்: சுழல் தி வோர்டெக்ஸ்

நடிப்பு: கதிர், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதிதா சதீஷ், சந்தான பாரதி, எஸ்.பிரேம்குமார், ஹரிஸ் உத்தமன், நிதிஷா வீரா, குமரவேல், இந்துமதி
தயாரிப்பு: புஷ்கர் காயத்ரி, கோபிகா ரமேஷ், எஃப் ஜே, எம்.பழனி, எஸ்.ஜீவா, யூசுப் உசேன்

எழுத்து உருவாக்கம்: புஷ்கர் காயத்ரி

இசை: சாம் சி.எஸ்.

ஒளிப்பதிவு: முகேஷ்

இயக்கம்: பிரம்மா ( 1 To 4 எபிசோட்ஸ்)

இயக்கம் : அனுசரண் எம். (5. To. 8. எபிசோட்ஸ்)

ரிலீஸ் : அமேசான் பிரைம் வீடியோ

பி ஆர் ஒ: யுவராஜ்

மலைப்பாங்கான கிராம பகுதியில் சிமென்ட் ஆலை உள்ளது. அதில் பணிபுரியும் தொழிலாளர் சங்க தலைவராக இருக்கிறார் சண்முகம் ( பார்த்திபன்). சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்கி றார் சண்முகம். அதை எதிர்க்கிறார் கம்பெனி எம் டி ட்ரிலோக் வட்டி. கோபம் அடைந்த சண்முகம் தொழிற் சாலையை எரித்து விடுவேன் என்று எச்சரிக்கிறார். திடீரென்று ஒருநாள் ஆலை தீப்பற்றி எரிகிறது. போலீசில் புகார் செய்ய சண்முகத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா ( ஸ்ரேயா ரெட்டி) பிடித்து செல்கிறார். போதிய ஆதாரம் இல்லாததால் சண்முகம் வெளியில் வருகிறார். ரெஜினாவுக்கும், சண்முகத் துக்கும் எப்போதும் மோதல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சண்முகத்தின் இளையமகள் நிலா (கோபிகா ரமேஷ்) கடத்தப்படுகிறார். பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. ரெஜினா மகனை காதலித்து அவனுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டதாக தகவல் கிடைக்கிறது. அவர்களை போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சக்கரை ( கதிர்) தேடுகிறார். எங்கும் நிலாவை கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியில் நிலாவை கண்டு பிடிக்க முடிந்ததா என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.

“சுழல் தி வோர்டெக்ஸ்” மொத்தம் எட்டு எபிசோட்களாக படமாக்கப்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப் பாகிறது. “விக்ரம் வேதா” வெற்றி படத்தை இயக்கி அளித்த புஷ்கர்,காயத்ரி “சுழல் தி வோர்டெக்ஸ்” கதை எழுதி தயாரித்திருக்கின்றனர்.

எட்டு எபிசோடாக உருவாகியுள்ள இத்தொடரின் முதல் 4 எபிசோட்களை பிரம்மா இயக்கியுள்ளார். 5 முதல் 8 வரையிலான எபிசோட்களை அனுசரண் எம். இயக்கியுள்ளார். இரண்டு இயக்கு னர்கள் இயக்கியிருந்தாலும் எந்த இடத்திலும் குழப்பம் ஏற்படாமலும், கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் உடையாமலும் இயக்கியிருப்பது முதலில் கதைக்குள் அவர்கள் எவ்வளவு ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

முதல்நாள் மயான கொள்ளை திருவிழாவுடன் கதை தொடங்கி அந்த விழாவும் கதையின் ஒரு கதாபாத்திர மாகவே மாறியிருக்கிறது. அதையே பின்புலமாக வைத்து இசையும், பின்னணி இசையும் புயல் வேகத்தில் சுழன்றடிக்க வைத்திருக்கிறார் சாம் சி எஸ்.

கதையின் வேகத்துக்கு காட்சிகளை தீப்பொறியாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் முகேஷ்.

நடிப்பை பொறுத்தவரை பார்த்திபன், கதிர், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் நான்குபேரும் போட்டிக் களத்தில் நீயா, நானா என போட்டியிட்டிருக்கின்றனர்.

பார்த்திபன் ஒருமுறை ஸ்கோர் செய்தால் மறுமுறை ஸ்ரேயா ரெட்டி போலீஸ் பந்தா காட்டி ஸ்கோர் செய்கிறார். அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் பங்கை சிறப்பாக அளித்திருக்கிறார். சீனுக்கு சீன் ஸ்கோர் செய்கிறார் சர்க்கிள் போலீஸாக வரும் கதிர். எல்லோருமே நடித்திருக் கிறார்கள் என்பதைவிட அந்தந்த பாத்திரன்மாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.

பார்த்திபனின் இளைய மகள் நிலாவாக வரும் கோபிகா ரமேஷ்தான் கதையின் முக்கிய புள்ளி. ஆரம்பத்தில் ஒரு சில சீன்கள் வந்து போகும் அவர் பிற்பகுதியில் செய்யும் அசகாய சூர வேலைகள் அதிர வைக்கிறது. ஸ்ரேயா ரெட்டியின் மகனாக வரும் அதிசயம் எஃப் ஜே துள்ளல் நடிப்பு கதாபாத்திரத்தை மெருகேற்றுகிறது.

கதையில் முக்கிய புள்ளி ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத் துக்கும் கிளைக்கதைகள் சுவாரஸ் யத்தை தூண்டுகிறது. மூன்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் மீது குற்றவாளி பார்வையை விழ வைத்து யாரும் எதிர்பார்க்காத பாத்திரத்தை குற்றவாளி யாக காட்டும்போது அதிர்வலைகள் எழுகிறது.

ஒரு முழு திரைப்படத்தை இரண்டு பாகம் பார்த்த உணர்வு மேலோங்குகிறது

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் “சுழல் தி வோர்டெக்ஸ்” பார்ப்பவர்கள் மனதை சுழலுக்குள் இழுத்துக்கொள்ளும்.

 

 

Related posts

5 மொழிகளில் “பாலன் தி பாய்” ஜூன் 19ல் வெளியீடு..

Jai Chandran

Prithviraj Productions to present 777Charlie in Malayalam!

Jai Chandran

ZEE5 “Sengalam” Trailer Launch Event!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend