Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வாட்ச் (பட விமர்சனம்)

படம்:வாட்ச
நடிப்பு: கிரிஷ், சபரினா ஆலம், மேத்யூ வர்கீஸ், உதயகுமார்

தயாரிப்பு: வி ஏ ஸ்டுடியோஸ்

இசை: சுகன்யன் சுந்தரேஸ்வரன்

ஒளிப்பதிவு : முகமது அமீன், விக்னேஷ் வாசு,இனியகதிரவன், கலைச்செல்வன்

இயக்கம்: விஜய் அசோகன்

கார்டூனிஸ்ட்  கிரிஷ் ஒரு ராணுவ வீரரின் மகன். இதனால் நாட்டின் மீதும் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருக்கிறார். அவருக்கு மருத்துவ துறையில் நடக்கும் மோசடி பற்றி தகவல் தெரியவர அதை அமபலப்படுத்த எண்ணி களத்திக் இறங்குகிறார். ஆனால் வில்லன் கூட்டம் அவரை அடித்து கோமா நிலைக்கு தள்ளுகிறது. மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்த பின்னர் அதிலிருந்து மீள்கிறார். அவருக்கு புதுவகை நோயும் வருகிறது. கோமாவிலிருந்து மீண்ட கிரிஷுக்கு  பழைய ஞாபகங்கள் வந்ததா? குற்றவாளிகளை பழிவாங்கி னாரா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

சமுதாய நோக்கம் கொண்ட படங்கள் எவ்வளவு வந்தாலும் அதன் மூலம் பிறக்கும் விழிப்புணர்வு என்னவோ குறைவாகவே உள்ளது. விழிப்புண்ர்வு முழுவீச்சில் வரவேண்டுமென்றால் வாட்ச் போன்ற நிறைய படங்கள் வர வேண்டும்.
ஹீரோ கிரிஷ் ஏதோ நான்கு டூயட் ரெண்டு பாடலுக்கு ஆட்டம் போட்டுவிட்டு போகாமல் மருத்து ஊழலை அம்பலப்படுத்த உயிரையே பணயம் வைக்கும்படியான அழுத்தமான் வேடத்தில் நடித்து துடிப்பு மிக்க ஆக்‌ஷன் ஹீரோவாக கண்களில் பதிகிறார்.

வில்லன்கள் மூலம் தாக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற கிரிஷ்  பின்னர் அதிலிருந்து மீளும்போது உறவுகளும், நண்பர்களும் முகம் .மாறுபட்டு தெரியும் நிலையில் வில்லன் கூட்டத்தை எப்படி அடையாளம் கண்டு பழிவாங்கப்போகி றார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

வில்லன் வேலையை மேத்யூ வர்கீஸ், உதயகுமார் கச்சிதமாக செய்திருக்கின் றனர்.

ஹீரோவை மையமாக கதை என்பதால் ஹீரோயின் சபரினா ஆலம்க்கு வேலை குறைவுதான். ஆனாலும் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

வி ஏ ஸ்டுடியோஸ் தயாரிக்க விஜய் அசோகன் திரில்லான திரைக்கதையுடன் படத்தை கடைசிவரை விறுவிறுப்பு குறையாமல் இயக்கி உள்ளார்.

சென்னை துறைமுகம், மும்பை அழகை கேமிர்ரவில் உள்ளம் கொள்ளைகொள் ளும் வகையில் படமாக்கி பரவசப்படுத்தி யிருக்கின்றனர் ஒளிப்பதிவாளர்கள் முகமது அமீன், விக்னேஷ் வாசு, இனியகதிரவன், கலைச்செல்வன்.

இசை அமைப்பாளர் சுகன்யன் சுந்தரேஸ்வரன் ஆக்‌ஷன் கதைக்கு ஏற்ற இசை வழங்கியுள்ளார்.

வாட்ச்- உயிர்காக்கும் மருத்துவ துறையில் ஊழலை தோலுரிக்கிறது.

Related posts

Akhanda 2: Thandavam Release On September 25th

Jai Chandran

பொன்னியின்செல்வன் ஜெயம்ரவி, கார்த்தி கேரக்டர்

Jai Chandran

WATCH #MahaanOnPrime NOW ONLY ON PrimeVideo

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend