எஸ்பிபாலசுப்ரமணியம் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் அங்கு அவரது பூர்வீக வீடு உள்ளது. அந்த வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கர மடத்துக்கு வேத பாடசாலை தொடங்க தானமாக அளித்தார். அங்கு தனது தாயார் சகுந்தலாம்மா, தந்தை எஸ்.பி. சம்ப மூர்த்தி ஆகியோருக்கு சிலை வைக்க முடிவு செய்தார். தத்ரூபமாக சிலைகள் வடிக்கும் மிகச் சிறந்த சிற்பி ராஜ்குமார். அவரை அழைத்து தனது பெற்றோர் சிலைகள் செய்ய ஆர்டர் கொடுத்தார். அந்த பணிகள் நடந்து வந்தபோது திடீரென்று அதற்கான புகைப்படங்களை சென்னை யிலிருந்தே அனுப்பி வைத்தார்.
இந்நிலையில்ம் எஸ்பிபி கொரோனா தொற்றுகுள்ளாகி மருத்துவமனையில் சேர்ந்து உடல்நிலை கவலைக்கிடமாகி 50 நாட்கள் போராடி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். பின்னர் அவரது உடெ்லை்செங்குனறம் தமரைப்பக்கம் கிரமத்தில் உள்ள பண்னை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி உடல் மண்ணுக்குள் சென்ற நிலையில் சிலை வடிவில் அவரை வடித்திருக்கிறார் ஆந்திர சிற்பி.
எஸ்பிபிக்கு தந்து முடிவை முன்னரே உள்ளூணர்வில் உணர்ந்துதான் தனது பெற்றோ சிலையுடன் தனது சிலையையும் வடிக்கச் சொன்னாரோ என்று பரபரப்பாக பேசப்படுகிறது.