பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப்பட் டார். தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி அவரது உடல் நிலை கவலைக்கிட மானது. உடனே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மயக்கநிலைக்கு சென்றார் எஸ்பிபி.
பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்று குணம் அடைந் தது. படிப்படியாக உடல்நிலை குணம் அடைந்து வந்தார்.விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று எண்ணிய நிலையில் நேற்று 1.04 மணிக்கு மரணம் அடைந் தார். அவருக்கு வயது 74.
எஸ்பி பி உடல் தாமரைப் பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் எஸ்பிபி உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் பாண்டி யராஜன் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் டைரக்டர் பாரதிராஜா, அமீர், நடிகர் கள் விஜய், அர்ஜுன் மயில்சாமி அஞ்சலி செலுத்தினர்.
பிறகு உடலுக்கு இறுதசடங்குகள் நடந்தது சம்பிரதாய முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டது. பண்னை வீட்டுக்கு வெளியில் நூற்றுக் கணக்கான ரசிகர் அஞ்சலி செலுத்த திரண்டிருந்தனர்.
அவரகளுக்கு 2 மணிநேரம் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. சிறுபகுதியினர் மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக் கப்பட்டனர். மற்றபடி நெருங்கிய உறவினர்கள். திரையுலக பிரமுகர்கள்
அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக எஸ்பிபி உடலுக்கு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்ய முதல்வர் உத்தர விட்டிருந்தார்
எஸ் பி பிக்கு குடும்பத்தினர் 2மணி நேரம் இறுதி சடங்குகள் நடத்தினர். மகன் எஸ்பி.சரண் சடங்குகளை முன்னின்று செய்தார்.
பின்னர் அடக்கம் செய்யும் இடத்துக்கு எஸ்பிபி உடல் எடுத்து செல்லப்பட்டது. சீருடை அணிந்த 24 காவலர்கள் மரியாதை யுடன் மூன்று முறை வானத்தை நோக்கி சுட்டு 72 குண்டுகள் முழங்கப்பட்டது. பின்னர் இசை முழங்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத் தில் பகல் 12. 30 மணி அளவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அடக்கம் நடந்தது.
எச்பிபிக்கு அந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.