Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பொங்கலுக்கு புதிய தலைமுறை டிவியில் நடிகர் சிவகுமாரின் திருக்குறள் 100

பிரபல நடிகர் சிவகுமாரின் திருக்குறள் 100 உரை நூல் அரங்கேற்ற விழா ஈரோடு புத்தகத் திருவிழாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருக்குறள் என்பது இனம் மொழி தேசம் கடந்த மனிதர்கள் அனைவருக்குமான ஒரு பொது மறையாக போற்றப்படு கிறது. திருக்குறளை பாமரனிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக நடிகர் சிவகுமார் 100 திருக்குறள் களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ப பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து வள்ளுவர் வழியில் வாழ்ந்த வர்களின் வரலாற்றுடன் குறல் என்கிற பார்வையில் திருக்குறள் நூறு என்கிற நூலை எழுதியிருக் கிறார் இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் பரிதி, பரிமேலழகர் முதல் கலைஞர், சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதி இருக்கிறார்கள் ஆனால் சிவகுமார் வள்ளுவரின் வழி நின்று வாழ்த்த தங்களை அறியாமலேயே குறலின்  வழியே சென்ற மனிதர்க ளின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதி உள்ளார். இதனைத் தொடர்ந்து இடைவிடாது நான்கு மணி நேரம் உரையாற் றியது இந்த நூற்றாண்டின் ஓர்  சாதனை என தமிழ் அறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்த இந்த அரங்கேற்ற விழாவின்போது கூடியிருந்த கூட்டத்தினர் சிறிதும் கவனம் சிதறாமல் இரவு நெடுநேரம் சென்று இடையில் எழாமல் முழு கவனத்துடன் அவரது பேச்சைக் கேட்ட விதம் வியப்பூட் டியது.

“வேண்டுதல் வேண்டாமை..” “இலானடி சேராதர்க்கு..” என்ற குரலில் தொடங்கி  நூறாவது கதையாக மலக்குழி இறங்கும் துப்புரவு தொழிலாளியின் கதையை கூறி “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..” என்று அதற்குரிய குறலைக் கூறி நிறைவு செய்துள்ளார்.
பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ள திருக்குறள் 100 சிறப்பு ஒளிபரப்பு புதிய தலைமுறை தொலைக் காட்சியில் பொங்கல் திருநாளில் தொடங்கி காணும் பொங்கல் வரை தொடர்ந்து மூன்று நாட்கள் அதாவது 15 1 2023, 16 1 2023, 17.1.2023 அதாவது ஞாயிறு திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனைத் தொடர்ந்து புதுயுகம் தொலைக் காட்சியில் குடியரசு தினத்தன்று ஜனவரி 26 காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

 

திரைத்துறை, அரசியல் தலைவர்கள்,  அயல்வாட்டு தலைவர்கள் , அறிஞர்கள்,  சக மனிதர்கள் என நம் கண்முன் வாழ்ந்த  மனிதர்களை உதாரணம் காட்டி இந்த உரையை எழுதியும் , பேசியும் உள்ளார்.

இன்று சென்னையில் பத்திரிக்கை யாளர்கள்  ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஈரோடு உரையை திரையிட்டு அனைவரின் பாராட்டும் பெற்றார்.  பின்னர் அவர் கூறும்போது,’ திருக்குறள் 100 உரையை எழுதி முடிக்கும் பணி 3 ஆண்டு ஆராய்ச்சி மற்றும் உழைப்புக்கு பிறகு நிறைவேறி யிருக்கிறது. இப்படியொரு முயற்சி இதுவே முதல்முறை என்று  தமிழ் அறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர் ‘ என்றார்.

Related posts

Kasada Tabara On Sonyliv from aug27

Jai Chandran

Actress Hansika Motwani married Mumbai-based tycoon

Jai Chandran

MAHAAN DhruvPosterReel OUT ON

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend