Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வி 3 (பட விமர்சனம்)

படம்: வி 3
நடிப்பு: வரலட்சுமி சரத், பாவனா, எஸ்தர் அனில், நரேன், சந்திரகுமார், பொன்முடி,ஜெய்குமார், ஷீபா

தயாரிப்பு: டீம் ஏ

இசை: அலென் செபாஸ்டின்

ஒளிப்பதிவு : சிவா பிரபு

இயக்கம்:அமுதவாணன்

பி ஆர் ஒ: சதீஷ், சிவா (AIM)

பேப்பர் ஏஜென்ட் நரேன். இவரது மகள்கள் பாவனா, எஸ்தர். வெளியில் சென்று வருவதாக கூறி செல்லும் பாவனா வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் நரேன் தேடிச் செல்கிறார். ஒரு இடத்தில் மகள் ஓட்டி வந்த பைக் சாய்ந்து கிடக்க அதைப்பார்த்து அலறுகிறார். போலீஸில் புகார் தருகிறார். அவர்கள் விசாரித்து விட்டு ஒரு இடத்தில் பெண் உடல் எரித்து செ
கொல்லபட்டிருப்பதாக தகவல் சொல்ல அதைப் பார்த்து அழுகிறார் நரேன். இதற்கு சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று மக்கள் போராடு கின்றனர். இளைஞர்கள் சிலரை பிடித்து குற்றவாளிகள் இவர்கள் தான் என்று சொல்லி என்கவுன்ட்டர் செய்கின் றனர் போலீஸார். விசாரணை அதிகாரி யாக வரும் வரலட்சுமி நடந்த உண்மைகளை கண்டறிந்து சொல்வது கிளைமாக்ஸையே திருப்பி போடுகிறது.

காலையில் டி விஏஸ் வண்டியில் சென்று வீடுவீடாக பேப்பர் போடும் நரேனின் பேப்பர் ஏஜென்ட் பணியிலிருந்து மெல்ல கதை தொடங்குகிறது.

மூத்த மகள் பாவனா வெளியில் சென்று வருவதாக கூறும்போதே ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பது தெரிகிறது.

மகளை காணவில்லை என்று நரேன் போலீஸில் புகார் அளிப்பதும் தீயில்
கருகி இறந்த பெண் உடலை அடை யாளம் காட்டச் சொல்லும் போதும் அதற்குள்ளேயா
ஹீரோயின் பாவனா கதையை முடித்து விட்டார்கள் என்று முணுமுணுப்பு எழுகிறது.
ஆனால் பின்னர் வரும் திருப்பங்கள் முன்னுக்கு பின்னாக இருப்பதும் உயர் அதிகாரி செய்தது போலி என்கவுன்ட்டர என்று தெரிய வருவதும் எதிர்பாராத திருப் பங்கள்.

பாவனா எதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். பலாத்கார காட்சியில் துணிச்சலாக நடித்துள் ளார். அவரது தங்கை யாக நடித்திருக்கும் எஸ்தர் நடிப்பில் எதார்த்தம் உண்டு

போலீஸ் அதிகாரி களையும், அரசியல் வாதிகளையும் படம் தோலுரிக்கிறது.

காட்சிகள் நிஜமாக நடக்கிறதா பொய்யாக நடக்கிறதா என்பது புரியாதளவுக்கு ஏகப்பட்ட குழப்பங்கள். திரைக் கதையின் தடுமாற்றமும் கவனத்தை சிதறடிக் கிறது.

இயக்குனர் அமுத வாணன் சட்டப்பூர்வமாக விபசாரத்தை அங்கரித் தால் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்காது என்ற தனது வாதத்தை ஹீரோயின் மூலமே சொல்லியிருக்கிறார். ஆனால் இது மட்டுமே தீர்வா என்பது விவாதத் துக்குரியது.

அலென் செபாஸ்டின் இசை, சிவா பிரபு கேமரா அளவோடு சுழன்றிருக்கிறது.

வி 3 – புதிதில்லை.

Related posts

தமன் நடிக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ இசை வெளியீடு

Jai Chandran

பிரபாஸ் படத்தில் இணைந்த அனுபம் கெர்

Jai Chandran

தலைவி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend