தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். கல்சிப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஎஷன் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. அதில் தனுஷ் கைவிலங்குடன் காணப்படுகிறார், அவருக்கு பின்னால் மக்கள் திரண்டு நிற்கின்றனர். கர்ணன் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
நடிகர் தனுஷ் தனது சமூக ஊடக பக்கத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் பகிர்ந்து, “ கர்ணன் முதல் தோற்றம் மற்றும் தியேட்டர் வெளியீடு” என குறிப் பிட்டுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வ ராஜும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்டார். அதில், ” நீதிக்கான ஆத்மா ஒருபோதும் இறக்கவில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் கர்ணன்’ என தெரிவித்திருக்கிறார்.
கர்ணன் படத்தில் ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா சந்திர மவுலி, நடராஜன் சுப்பிரமணி யன், யோகி பாபு, அழகம் பெருமாள், லால் மற்றும் கவுரி ஜி கிஷன் ஆகியோர் நடிக்கின் றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்
previous post