படம் : தக்ஸ்
நடிப்பு: ஹிருது ஹரூன், சிம்ஹா, முனிஸ்காந்த், ஆர்.கே.சுரேஷ், அருண், அரவிந்த, சுப்பராயன், பி.எல்.தேனப்பன்
தயாரிப்பு: ரியா சிபு, மும்தாஜ். எம்
இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: பிரயேஷ் குருசாமி
இயக்கம்: பிருந்தா
பி ஆர் ஒ: சதீஷ் குமார், சிவா (AIM)
அண்ணாச்சி தேனப்பனிடம் கணக்கு வழக்கு பார்க்க தன் தந்தையால் சேர்க்கப்படுகிறார் சேது ( ஹிருது ஹரூண்). தன் நண்பனுக்கு உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் சேது. இதற்கிடையில் தன் காதலியை தொந்தரவு செய்யும் ரவுடியை சேது தாக்க அவன் இறக்கிறான். கொலைப் பழி, திருட்டு பழியுடன் நாகர்கோயில் மத்திய சிறையில் அடைக்கப் படுகிறான் சேது. ஜெயிலில் வைத்து அவனிடம் கொள்ளை போன பணம் டாக்குமென்ட்டையும் மிரட்டி பெற அண்ணாச்சி தேனப்பன் முயல்கிறார். அது நடக்கவில்லை. இந்நிலையில் சில கைதிகளுடன் சேர்ந்து ஜெயிலி லிருந்து சேது தப்பிக்க திட்டமிட்டு ஜெயிலுக்குள் சுரங்க பாதை தோண்டுகிறான். அந்த திட்டம் நிறைவேறியதா என்பதற்கு விறுவிறுப்புடன் பதில் சொல் கிறது கிளைமாக்ஸ்.
தத்ரூபமாக ஒரு ஜெயில் செட் அமைத்து 90 சதவீத படப்பிடிப்பை அதற்குள்ளேயே நடத்தியிருக்கி றார் இயக்குனர் பிருந்தா.
புதுமுகம் ஹீரோவாக அறிமுக மாகிறார் ஹிருது ஹரூன். புதுமுகம் என்றாலும் அனுபவ நடிகர்போல் காட்சிகளில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்டண்ட் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து மோதுகிறார்.
முகபாவனைகளில் இன்னமும் தேர்ச்சி பெற வேண்டும். கிளை மாக்ஸ் முடிந்த பிறகு வரும் அந்த பக்தி பாடலில் ஆக்ரோஷம் காட்டி ஆடியிருக்கிறார் ஹிருது.
சிம்ஹாவுக்கு கதாபாத்திரத்தில் பில்டப் இருந்தாலும் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறைவுதான். ஜெயிலராக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் கோபத்தை நன்கு வெளிப்படுத்துகிறார்.
சித்ரவதை செய்யும் ஜெயிலராக இல்லாமல் கண்டிப்பு காட்டுபவ ராக நடித்து பெயரை காப்பாற்றிக் கொள்கிறார்.
முனிஸ்காந்த் குண்டு உடம்பை வைத்துக் கொண்டு சுரங்க பாதைக்குள் கஷ்டப்பட்டு நுழைந்து நடித்திருக்கிறார்.
டுவின்ஸ் அருண் , அரவிந்த ஊறுகாயாக பயன்பட்டிருக்கின் றனர்.
ஹீரோயின் அனாஸ்வராவுக்கு அதிக வேலையில்லை. கதையின் லீடுக்கு பயன்பாட்டிற்கும் அவர் ஒரு சில காட்சிகளே வருகிறார்.
ஹாலிவுட் ஸ்டைலில் ஜெயிலிருந்து சுரங்க பாதை தோண்டி கைதிகள் தப்பிக்கும் கதையாக உருவாக்க வேண்டும் என்று இயக்குனர் பிருந்தா மெனக் கெட்டிருக்கிறார் நடிகர்களை கடுமையாக வேலை வாங்கியிருக் கிறார். ஆனால் ஜெயில் அறைக்குள் சுரங்கம் தோண்டும் மண்ணை அங்குள்ள டாய்லெட்டில் கொட்டி மறைப்பது சரியான லாஜிக்காக இல்லை. அவ்வளவு ஆழம் தோண்டும் மண்ணையும் டாய்லெட்டில் கொட்டினால் அடைத்துக் கொள்ளாதா. அங்கு சேகரித்து சேர்த்து வைக்கப்படும் கற்கள் போலீசார் பார்வையில் படாதது எப்படி என்ற சில கேள்விகளுக்கு விடையில்லை.
ஆனால் ஒரு ஆக்ஷன் படத்தை சூடுபறக்க தன்னால் இயக்க முடியும் என்பதை பிருந்தா நிரூபித்திருக்கிறார்.
பிரயேஷ் ஒளிப்பதிவு காட்சி களுக்கு புதுவித டச் கொடுத்தி ருக்கிறது.
சாம் சி எஸ் பின்னணி இசையில் கொளுத்தியிருக்கிறார்.
தக்ஸ் – முரட்டு ஆக்ஷன் விளையாட்டு.