Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

என் ரசிகர்கள் விஜய் படம் பாருங்கள், விஜய் ரசிகர்கள் என் படம் பாருங்கள்.. நடிகர் சிம்பு அறிக்கை..

100 சதவீதம் அனுமதி கேட்டும் விஜய் படம் பார்க்கச் செல்லி  தன் ரசிகர்களுக்கும் தன் படம் பார்க்கச் சொல்லி விஜய் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் சிம்பு. இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது:
இனிய புத்தாண்டை தொடங் கியிருக்கும் சினிமா ரசிகர்க ளுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்து களும்!
“ஈஸ்வரன்” பொங்கல் தினத் தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்கு களின் மீட்சிக்காகத்தான்.
திரையுலகமே முடங்கி விட்டது. ஆன்லைன் வெளி யீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.
அதற்காகத்தான் இந்தக் கொரோனா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல.
இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக் கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் நடித்துள்ள படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடிய மிற்கு செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்க வேண்டு மென்று விரும்பி னேன். நாங்கள் திரையரங்கு களால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடு வதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டி ருக்கலாம். ஆனால் திரை யரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டு மென பொறுத்திருந்து வெளி யிடுகிறார்.
திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும் போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்கு வார்கள்.
என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்.
திரையரங்குகள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கை யோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளி யாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக் கும்.
விநியோகஸ்தர்கள், திரையரங் குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன்.
அரசாங்கம் கடைகள், மால்கள் , கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டு விட்டன. திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டு விட்டாலொழிய அந்த பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர் களையும், சினிமா தொழிலா ளர்களின் வாழ்வாதாரத் தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதல்வர் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம். நன்றி. அன்புசெய்வோம்.

இவ்வாறு சிம்பு அறிக்கையில் கூறி உள்ளார்.

Simbu, Eswaran, Master, Vijay, சிம்பு, ஈஸ்வரன், மாஸ்டர், விஜய்,

Related posts

Prabhas-Pooja Hegde starrer ‘Radhe Shyam’ release date announced

Jai Chandran

Sivakarthikeyan Productions Vaazh On OTT

Jai Chandran

கப்ஜா (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend