Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஷாட் பூட் த்ரீ ( பட விமர்சனம்)

படம்: ஷாட் பூட் த்ரீ

நடிப்பு: சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, பர்னிதி, பூவையார், கைலாஷ் ஹீட்,  வேதாந்த் வசந்தா, அருணாசலம் வைத்தியநாதா, , சாய் தீனா

தயாரிப்பு: யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ்

இசை:ராஜேஷ் வைத்யா

ஒளிப்பதிவு: ஸ்தேசன் ஶ்ரீனி வாசன்

இயக்கம்: அருணாச்சலம் வைத்தியநாதன்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

 

சினேகா,  வெங்கட்பிரபு மகன் கைலாஷ். பள்ளியில் படிக்கிறான். இவரது நண்பர்கள் பிரினிதி , வேதாந்த் வசந்தா. கைலாஷ் பிரியமாக நாய் வளர்க்கிறான். ஒரு சமயம் நாய் வீட்டிலிருந்து.  காணாமல் போய்விடுகிறது.  அதை தேடி கைலாஷ் நண்பர்கள் செல்கின்றனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நாயை கார்ப்ப ரேசன் ஊழியர்கள் பிடித்து அடைத்து வைக்கின்றனர்.  அவர்களிடம் நாய் இருப்பதை அறிந்து கேட்க செல்லும் கைலாஷ் மற்றும் நண்பர்களை ஊழியர்கள் விரட்டியடிக்கின்றனர் . இறுதியில் அந்த நாயை சிறுவர்கள் எப்படி மீட் கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்..

முழுக்க குழந்தைகளுக்கான படம் ஷாட் பூட் த்ரி. அம்மாவும் அப்பாவும் ஆளுக்கொரு    பக்கம் லேப்டாப்,. வைத்துக்கொண்டு வேலை பார்க்க பள்ளிக்கு சென்று திரும்பிய மகன் யாருடன் விளை யாடுவது என்று தெரியாமல் திணறி தனக்கு துணையாக ஒரு நாய் குட்டி வளர்க்க ஆசைப்படு வதும் அதற்கு தாய் சினேகா அனுமதி தர மறுப்பதும் பெரும்பா லான வீட்டில் நடக்கும்  கூத்து.

நாய் குட்டி கிடைத்த பின் கைலாஷ் அதன் மீது பிரியம் காட்டுவதும் அது காணாமல்.போனபின் அதைத் தேடி  நண்பர்களுடன் வீதி வீதியாக திரிவதும்  படம் முழுவதும் தொடர்கிறது. 3 நண்பர்களுடன் கொஞ்சம் தைரியமான தம்பியாக வரும் பூவையார் கவர்கிறார்.

ஊரெல்லாம் நாய் தொல்லை அதிகரித்து அது மக்களை கடித்து குதறி செய்யும் அட்டூழியத்தை ஒரு காட்சியில் இயக்குனர் சுட்டி காட்டி இருக்கிறார். ஆனாலும் அதற்கான தீர்வு சரியாக சொல்லப்பட வில்லை.

நாய் வளர்ப்பவர்கள் அதை சரியாக பராமரிக்க வேண்டும் கயிற்றில் கட்டி சாலையில் அழைத்துச் செல்ல வேண்டும் மற்றவர்களை பயமுறுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பன போன்ற சில.பொதுவான  விதிமுறைகளை சில மண்டு களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லி இருக்கலாம்.

படம்.முழுக்க நாயை தேடி கண்டு பிடிக்கும் காட்சியாகவே சென்று விட்டதால்  வேறு திசை திரும் பல்கள்  எதுவும்.இல்லாமல் படம் நகர்கிறது.

அஜீத் ரசிகராக வரும் யோகிபாபு, சாய் தினா எபிசோட்  ரிலாக்ஸ் பிளஸ்  காமெடி

யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. ராஜேஷ் வைத்யா இசை ஒ கே தான். ஆனால் சில ஸ்பெஷல் டியூனை முயன்றிருக்கலாம்..

சுதர்சன் ஶ்ரீனிவாசன்  ஒளிப்பதிவு எதார்த்தம்

அருணாச்சலம் வைத்தியநாதன் பள்ளி குழந்தைகள் பள்ளி பள்ளியாக  சென்று பார்க்கத்தக்க படத்தை தந்திருக்கிறார்.

ஷாட் பூட் த்ரி – வரிவிலக்கு தரத்தக்க குழந்தைகள்  படம்.

 

 

 

Related posts

‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன் வரவேற்பு

Jai Chandran

குடிசை பகுதி குழந்தைகள் சமூக சேவையில் நடிகர் ஆதி

Jai Chandran

நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend