Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டெக்ஸ்டர் ( பட விமர்சனம்)

படம்; டெக்ஸ்டர்

நடிப்பு: ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ்,
யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன், ஹரிஷ் பெரடி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்கள் பெஹ்மின், பர்ஹான ஜான்வி,சினேகல், ஆதித்யன்

தயாரிப்பு: பிரகாஷ் எஸ்.வி.

இசை: ஸ்ரீநாத் விஜய்

ஒளிப்பதிவு: ஆதித்ய கோவிந்தராஜ்

இயக்கம்: சூரியன்.ஜி

பி ஆர் ஒ: வெங்கட்

டெக்ஸ்டர் ! இது என்ன தலைப்பு என பலருக்கும் குழப்பம் வரும். பிரபலமான ஆங்கில வெப் சீரிசில் வரும் ஒரு தலைப்புதான் டெக்ஸ்டர் என்கிறார் இயக்குனர்.

இப்படத்தின் கதை இரண்டு பகுதிகளை கொண்ட கருவுடன் உருவாகி இருக்கிறது.

காதலியை பறிகொடுத்த காதலன் பைத்தியம் பிடித்தவன்போல் மாறி தற்கொலைக்கு முயல்கிறான். அவனுக்கு வித்தியாசமான ஒரு அறுவை சிகிச்சை செய்கிறார் டாக்டர். அதன்பிறகு வேறு கதை களத்துக்குள் எனட்ரீ தருகிறார் ஹீரோ. சிறுவயது கோபத்தை மனதில் வைத்து  ஹீரோ மற்றும் அவனது தோழியை வில்லன் கடத்திச் சென்று தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறான். திட்டப்படி அவன் விரித்த வலையில் ஹீரோ, நாயகி விழுகின்றனர். அவர்கள் கதி என்னவானது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

தடாலடி ஹீரோவாக ராஜீவ் கோவிந்த் நடித்திருக்கிறார். அந்தக் கால இயக்குனர் கர்ணன் பட பாணி ஹீரோ போல் ராஜிவ் கோவிந்த் ஹீரோயினை முதல் பாடல் காட்சியிலேயே பதம் பார்ப்பது இளவட்டங்களின் உதட்டில் எச்சில் ஊற வைக்கும். திடீரென்று அதிரடி ஆக்ஷனில் குதித்து நம்ப முடியாத ஸ்டன்ட் செய்து கதற விடுகிறார்.

டி மாண்டி காலனி படத்தில் நடித்த அபிஷேக் ஜார்ஜ் இடைவேளைக்கு பிறகு என்ட்ரீ கொடுத்து வில்லத்தனம் செய்து கொஞ்சம் முகம் சுளிக்க வைத்தாலும் சீரியஸ் மூடில் வில்லத்தனத்தில் ரவுசு காட்டுகிறார். துணியை தூக்கி காட்டி ஹீரோயினை மிரட்டும்போது சிரிப்பு வருகிறது.
சென்சார் ப்ளர் எபெக்ட் ரசிகர்களை மிரட்சியிலிருந்து காப்பாற்றுகிறது.

ஹீரோயின் யுக்தா பெர்வி, ஹீரோ ராஜிவுடன் நெருக்கம் காட்டி கவர்ச்சி அலை வீசுகிறார். இரண்டாவது நாயகி சித்தாரா ஹீரோவுடன் புதிய உறவு பாராட்டி அவரை சிக்கலில் கோர்த்து விடுவது எதிர்பாராத ஷாக்.

பிரகாஷ் எஸ்.வி. தயாரித்திருக்கிறார்.

ஸ்ரீநாத் விஜய் இசை அதிர்கிறது.

ஆதித்ய கோவிந்தராஜ் கேமரா கலர்புல்லாக காட்சியை படமாக்கியுள்ளது

சிறுவயதில் சக தோழி, நண்பரால் அவமானப்பட்டதால்
மனதில் ஏற்பட்ட வடு யார் மனதிலும் ஆறாது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சூரியன்.ஜி.
தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றாலும் அங்கு கட் கொடுத்தது போக மீதமுள்ள வண்டை வார்த்தைகள் காதுகளை பதம் பார்க்க தவறவில்லை.

டெக்ஸ்டர் – இரு சைக்கோக்களின் கதை.

 

Related posts

21திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ள “சா” படத்தின் முதல் பார்வை

Jai Chandran

எஸ்.ஜே .சூர்யா நடிக்கும் “ கடமையை செய் “

Jai Chandran

Health Issue: Director Bharathiraja Statement

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend