மனித நேயர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவர்களில் மூத்த பத்திரிகையாளரான திரு. நாகை தருமன் (வயது 76) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று பிற்பகல் 12.15. மயிலாப்பூரிலுள்ள தனது இல்லத்தில் காலமானார்.
சிறந்த எழுத்தாற்றல் கொண்ட இவரை தனது அண்ணா, தாய் இதழ்களில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திக்கொண்டார். ‘நவமணி’ நாளிதழ் உட்பட பொம்மை, பேசும் படம், சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்களில் எழுதியவர் நாகை தருமன். பின்னாளில் ‘இதயக்கனி’ யில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. அவரோடு நமக்கு 35 ஆண்டு கால நட்புண்டு.
‘இதயக்கனி’ படத்திற்கு வசனம் எழுதிய ஜெகதீசனின் படங்களில் மக்கள் தொடர்பில் இருந்தவர் திரு. நாகை தருமன்.
சிவாஜி நடித்த ‘துணை’ படத்திற்கு எம்.ஜி.ஆர். ஆசியுடன் கதை எழுதியுள்ளார். இவர் எம்.ஜி.ஆர். பற்றி வெளியிட்ட நூல்களில் ‘சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள்’ பிரசித்தமானது. நாகை தருமன் அவர்களது ஆன்மா சாந்தி பெற ‘இதயக்கனி’யும் வாசகர்களும் பிரார்த்திக்கிறார்கள்.