Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தேஜாவு (பட விமர்சனம்)

படம்: தேஜாவு

நடிப்பு: அருள்நிதி, மதுபாலா, அச்யூத்குமார், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட், ராகவ் விஜய்,

தயாரிப்பு: ஒயிட்கார்ப்பெட் பிலிம்ஸ் கே.விஜய்பாண்டி

ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா

இசை: ஜிப்ரான்

இயக்கம்: அரவிந்த் ஸ்ரீனிவாசன்

பி. ஆர் ஓ: சதீஷ் (AIM)

 

போலீஸ் டிஜிபி மதுபாலா மகள் திடீரென கடத்தப்படுகிறார். யார் கடத்தியது என்பது தெரியாத நிலையில் அவர்களை கண்டுபிடிக்க ரகசிய அதிகாரியாக அருள்நிதி நியமிக்கப்படுகிறார். எழுத்தாளர் ஒருவர் இந்த விவரங்கள் அனைத்தையும் கதையாக எழுதுகிறார்.  போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் எழுகிறது. அவரை கண்காணிக்க போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கூடவே இருக்கிறார். ரகசிய அதிகாரி அருள்நிதி தனது பாணியில் துப்பறிகிறார். அவருக்கும் எழுத்தாளர் மீது சந்தேகம் எழுகிறது. பலரிடம் விசாரணை, தேடுதல் வேட்டை நடத்தும் அருள்நிதி இறுதியில் கடத்தப்பட்ட மதுபாலா மகளை எப்படி கண்டுலிடிக்கிறார். அவர் கடத்தப்படுவதற்கான காரண்ம் என்ன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு அதிர்ச்சியான பதில் அளிக்கிறது தேஜாவு.

தேஜாவு டைட்டில் எப்படி வித்தியாசமாக இருக்கிறதோ படமும் துப்பறியும் கிரைம் கதையாக வித்தியாசமாக கூடவே விறுவிறுப்பாக செல்கிறது.

ரகசிய அதிகாரியாக அருள்நிதி அசத்தலான நடிப்பில் அசர வைக்கிறார். குற்றவாளிகளை அவர் நெருங்கும் விதமும், அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் நேரில் பார்ப்பதுபோல் எழுத்தாளர் கதையாக எழுதுவதும் சஸ்பென்ஸை அதிகரிக்கிறது.

எப்படி ஸ்கெட்ச் போட்டாலும் அதிலிருந்து குற்றவாளிகள் தப்பிப்பது எப்படி என்று ஒரு கட்டத்தில் அருள்நிதியே குழம்பி எழுத்தாளரை தாக்கி ஆவேசப்படும்போது பதறவிடுகிறார்.

மதுபாலா போலீஸ் டி ஜிபியாக வேடமேற்று அசாதாரண நடிப்பின் மூலம் மிரள் வைக்கிறார். எழுத்தாளர் கதாபாத்  திரம்போல் மதுபாலா பாத்திரமும் சஸ்பென்ஸுக்குள் மூழ்கியிருப்பதும் இடைவேளைக்கு பிறகு அம்பலப்படும் போதும் அரங்கே ஷாக்கில் அமைதி யாகிறது..

கான்ஸ்டபிளாக காளிவெங்கட் கச்சிதமாக நடித்து சஸ்பென்ஸை அதிகரிக்க உதவியிருக்கிறார்.

அச்யூத்குமார், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட், ராகவ் விஜய், நடிப்பும் ஓகே.

ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்திருக்கிறார்.

படத்தை அரவிந்த்ஸ்ரீனிவாசன்  புதிய கோணத்தில் இயக்கி முதல் படத்திலேயே முத்திரை  பதித்திருக்கிறார். கடைசிவரை சஸ்பென்ஸை கட்டிக்காத்து கொண்டு சென்றிருக்கும் திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகிறது.

பி.ஜி.முத்தையாவின் கேமிராவும், ஜிப்ரானின் இசையும் காட்சிபடுத்த லையும், விறுவிறுப்பையும்  தரம் குறையாமல் கையாண்டிருக்கின்றன

தேஜாவு- அருள்நிதியின் வெற்றி பட பட்டியலில் இடம் பிடிக்கும்.

 

 

Related posts

கவுதம் கார்த்திக்குடன் இணையும் ஸ்ரீதிவ்யா.. பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார்..

Jai Chandran

நாற்காலி: எம்ஜிஆர் புகழ் பாடும் எஸ்பிபியின் நெஞ்சமுண்டு..

Jai Chandran

நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகம்: ஆண்ட்ரிய ஹூரோயின்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend