Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் முக முத்து உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இறுதி அஞ்சலி

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி -பத்மாவதி தம்பதியின் மகன் முக முத்து ( வயது 77) . இவர் 1970 காலகட்டங்களில் சினிமாவில் ஹீரோவாக நடித்தார் பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு, பூக்காரி, சொந்தக்காரன் என பல படங்களில்
நடித்தார்.
மறைந்த புரட்சி தலைவர் எம் ஜிஆரின் ரசிகராக முக முத்து இருந்தார். இதையடுத்து முக முத்து நடித்த  பிள்ளையோ பிள்ளை படத்தை எம் ஜி ஆர் கிளாப் அடித்துதொடங்கி வைத்தார்.
ஒரு கட்டத்துக்கு பிறகு மு.க. முத்து சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.

கடந்த சில நாட்களாக முக முத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . சிகிச்சை பலனில்லாமல் இன்று (ஜூலை19 2025)காலை 8 மணி அளவில் அவர் காலமானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முகமுத்து உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் கோபாலபுர இல்லத்துக்கு முத்து உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தமிழக முதல்வரும் சகோதரருமான முக ஸ்டாலின் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும்  முக அழகிரி தமிழக அமைச்சர்கள்  மேலும்  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் . நடிகர் விக்ரம்,.துருவ்  விக்ரம் அஞ்சலி செலுத்தினார்கள். மாலையில் முக முத்து உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெசன்ட் நகர்.மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

முக முத்து 1948ம்  ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி பிறந்தார்.
முக முத்துவுக்கு
கலைத் துறையில் ஆர்வம் இருந்தது. பிள்ளையோ பிள்ளை , பூக்காரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அவர் தனது சொந்த குரலில் பல்வேறு  பாடல்களையும் பாடி உள்ளார். 2006ம் ஆண்டு தேவா இசையமைத்த “மாட்டுத் தாவணி” படத்தில் மு.க.முத்து ஒரு பாடல் பாடினார். அப்படத்தின் இசை வெளியீட்டு. விழாவில் முகமுத்து கலந்து கொண்டார் அதன்பிறகு வேறு சினிமா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

Related posts

Actor Mohan-starrer ‘Haraa’ Teaser Launch

Jai Chandran

கபிலன் வைரமுத்து படைப்புகள்: சிறப்பு காணொளி வெளியீடு

Jai Chandran

Vel’s football club collaboration with Puma

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend