Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

இடியட் (பட விமர்சனம்)

படம்: இடியட்

நடிப்பு: சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், ஊர்வசி, கிங்ஸ்லி, அக்‌ஷரா கவுடா, ரவி மரியா, மயில்சாமி, சிங்கமுத்து, ஆர்என்ஆர் மனோகர், சிவசங்கர்

தயாரிப்பு: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட்
பிரைவேட் லிமிடெட்

இசை: விக்ரம் செல்வா

ஒளிப்பதிவு: ராஜா

இயக்கம்: ராம் பாலா

பி ஆர் ஒ: நிகில் முருகன்

செம்மனூர் ஜமீன் குடும்பத்தினரை அந்த வீட்டு காவலாளிகளே பாதாள சிறையில் அடைத்து சாகடித்து சொத்துக்களை அபகறிக்கின்றனர். அந்த குடும்பத்திலி ருந்து ஒரு குழந்தை மட்டும் தப்பிக்கிறது. காலம் உருண்டோடுகிறது. சொத்துக் களை கொள்ளையடித்தவரின் வாரிசான சிவாவை வீட்டிலிருந்து துரத்தும் அவரது தந்தை செம்மனூர் ஜமீன் சொத்து பத்திரத்தை அவரிடம் வீசுகிறார். ஜமீனை பார்க்க வரும் வழியில் விபத்தில் சிக்கி மென்ட்டலாகிறார் சிவா. இதற்கிடையில் ஜமீன் வாரிசான நிக்கி கல்ராணியை பெண் மந்திரவாதி கடத்திக் கொண்டு ஜமீன் பங்களாவுக்கு வருகிறார். மகளை தேடி அதே பங்களாவுக்கு வருகிறார் ஆர் என் ஆர் மனோகர். நிக்கியின் உயிரை பலியிட்டு தன் காதலன் உயிரை மீட்க பெண் மந்திரவாதி திட்டமிடுகிறார். இந்த குழப்பமான நிலையில் அடுத்து நடப்பது என்ன என்பதை காமெடி கலந்து சொல்கிறது கிளைமாக்ஸ்.

இயக்குனர் ராம் பாலா படமென்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது என்பதை மீண்டும் இப்படம் நிரூபித்திருக்கிறது. இவருடன் சிவாவும் சேர்ந்திருப்பதால் காமெடி சரவெடி தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை வெடிக்கி றது.

ஹீரோ சிவாவையும் காமெடி பஞ்ச்களையும் எப்போதும் பிரித்து பார்க்க முடியாது. அதையேத்தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார். கபடி போட்டியின்போது எதிர் அணியினரை கைகுலுக்கி அவுட் செய்வதில் தொடங்கி கிளைமாக்ஸில் பெண் மந்திரவாதியிடம் காமெடியாக ஃபைட் செய்வதுவரை எல்லாமே கலகலப்புத்தான்
நிக்கியை கடத்தி வைத்துக் கொண்டு பேரம் பேசும் ரவிமரியாவிடம் அவர் கேட்கும் தொகையைவிட பல மடங்கு கூட்டி 8 ஆயிரம்கோடி தருவதாக சிவா கூறுவதும் அதைக்கேட்டு ரவிமரியா தலைசுற்றி கீழேவிழுவதும் வெடிச்சிரிப்பு.

இந்த காமெடிபோதாதென்று ஆனந்தராஜ், ஊர்வசி, சிங்கமுத்து, மயில்சாமி என்று பெரிய பட்டாளமே சிரிப்பு அதகளம் செய்திருக்கின்றனர்.

சிவசங்கர் குடும்பமே பேயாக வந்து தெலுங்கில் பேசியும், ரெக்கார்ட் பிளேயரில் பாட்டை சுழலவிட்டு நடனம் ஆடுவதுமாக வயிற்றை பதம்பார்க் கின்றனர்.

பேய்களுக்கு நகம் வெட்டும் சிவா, பேயை உருட்டுக்கட்டையால் அடிக்கும் கிங்ஸ்லி ஆகியோரின் நான் ஸ்டாப் காமெடி அதிரவைக்கிறது.

காமெடி பேய் ஸ்பெஷலிஸ்ட் இயக்குனர் ராம் பாலா தனது அக்மார்க் பார்முளாவை மீண்டும் பதித்திருக்கிறார்.

இசை அமைப்பாளர் விக்ரம் செல்வா, ஒளிப்பதிவாளர் ராஜா கவனித்திருக்கின்றனர்.

இடியட்- தில்லுக்கு துட்டு பாணியில் மற்றொரு   பேய் கலாட்டா.

Related posts

“செந்தமிழ் தேன் மொழியாள்” பாடல் புகழ் ஜமுனா ராணி காலமானார்..

Jai Chandran

MUSICIAN S. J. JANANIY WINS SIX CLEF MUSIC AWARDS

Jai Chandran

Actor_Mahendran Starring Amigo Garage Title look

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend