நீண்ட காலமாக அரசியலில் ஈடுபாட்டிருக்கும் பிரபல நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் இனைந்தார். தீவிரமாக அரசியல் பணியாற்றி வரும் குஷ்புவை 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளராக பா.ஜ அறிவித்தது.
இதையடுத்து குஷ்பு இன்று ஊர்வலமாக சென்று ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.