Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சர்தார் ( பட விமர்சனம்)

படம்: சர்தார்

நடிப்பு: கார்த்தி(இரட்டை வேடம்), ராசிகண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, யூகிசேது, முனிஷ்காந்த், யோகி ஜேபி, மொஹம்மா அலி பேக், இளவரசு, மாஸ்டர் ரித்விக், அவினாஸ், பாலாஜி சக்திவேல், சுவாமிநாதன், ஆதிரா பாண்டிலக்‌ஷ்மி, முத்துலட்சுமி

தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லக்‌ஷ்மன்குமார்

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

இயக்கம்:பி. எஸ்.மித்ரன்

பி.ஆர். ஒ: ஜான்சன்

சர்தார் (கார்த்தி) உளவு வேலை பார்த்ததற்காக வெளிநாட்டு சிறையில் தனி அறையில் அடை பட்டுகிடக்கிறார். உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீரை ஒன் இந்தியா ஒன் பைப் லைன் என்ற திட்டத்தின் கீழ் விலைக்கு விற்பதுடன் இந்தியாவின் தண்ணீர் மேலாண்மையை தன் கட்டுப் பாட்டுக்குள்கொண்டு வர சீனா ரகசிய திட்டம் செயல்படுத்து கிறது. அதை முறியடிக்கும் முயற்சியில்தான் சர்தார் சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த திட்டம் ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டாலும் சீனாவின் சதியை கண்டறிகிறார் இன்ஸ் பெக்டர் விஜய் பிரகாஷ் (கார்த்தி) பின்னர்தான் சர்தார் தனது தந்தை என்பது விஜய் பிரகாஷுக்கு தெரியவருகிறது. தந்தை மீது தேச துரோகி பட்டம் சூட்டப்பட்ட நிலையில் அவரை நிரபராதி என நிரூபிக்க போராடுவதுடன் சீனாவின் தண்ணீர் கட்டுப்பாடு சதியையும் அம்பலப்படுத்தி நிரூபிக்க போராடுகிறார். அவரது போராட்டம் வெற்றி பெற்றதா? சர்தார் கதி என்ன ஆனது என்ப தற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக் கிறது.

1983 கால கட்டங்களில் தொடங்கும் கதை 2000 ம் காலகட்டம் கடந்தும் தொடர்கிறது.

பப்ளிசிட்டி விரும்பும் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் கார்த்தி ஜாலியாக காட்சிகளை நகர்த்து கிறார். பெயர் தெரியாத சிலையை திறக்கச் சொல்லி அரசியல்வாதி இளவரசு அடியாட்களுடன் வந்து கலவரம் நடத்த “அங்கு பிரஸ் மீடியா இருக்கிறதா ?”என்று கேட்டுக் கொண்டு பந்தாவாக நடந்துவரும் கார்த்தி லாரி டாங்கில் பெட்ரோலை நிரப்பி வந்து அங்குள்ள அடியாட்களை தலை தெறிக்க ஓடவிடுவது அமர்க்களம்.

ரகசிய அறையிலிருக்கும் சர்தார் சம்பந்தப்பட்ட பைலை, லைலா திருடிச் செல்வதை கண்டுபிடிக்கும் கார்த்தி அவரை விசாரிக்க தேடிச் செல்வதும் அவர் இறந்துகிடப் பதை கண்டு கார்த்தி அதிர்வதும் ‌ஷாக்.

சர்தார் கார்த்தி எப்போது வருவார் , அதகளம் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டிருக்க அதற்கு தீனி போடும் வகையில் சிறை கதவை திறந்துக்கொண்டு ரவுடி களை அடித்து துவம்சம் செய்யும்போது விசில் சத்தம் பறக்கிறது.

முரட்டுத்தனமான சர்தார் கெட்டப்  புக்கு ஏற்ப கார்த்தியின் முகபாவம் முரட்டுத்தனமாக செட்டாகி யுள்ளது.
நாடக நடிகராக வந்து ஏறுமயிலேறி பாடலில் கூத்துக்கார ஆட்டக்கரர் போல் ஸ்டெப் வைத்து ஆடுவது ஜோர். கையில் வேல் ஏந்தி முருகர் கெட்டப்பில் நிற்கும் போது தந்தை சிவகுமாரின் அந்தக் கால முருகர் கெட்டப்பை கண்முன் கொண்டு வருகிறார் கார்த்தி.

முழுக்க முழுக்க கார்த்தி தான் படத்தை தோளில் சுமந்திருக் கிறார். ராசி கண்ணா, ரஜிஷா கொடுத்த வேலையை செய்திருக்  கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் தலைகாட்டும் லைலா பேர் சொல்லிக் கொள்ளும் வேடம் ஏற்றிருக்கிறார்.

வில்லன் சங்கி பாண்டே டிப்டாப்பாக மிரட்டுகிறார்.

படத்தில் வசனங்கள் நீண்டு நீண்டு செல் கிறது. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று நறுக்கான வசனம் இல்லாதது மைனஸ். காட்சிகள் பெரும்பாலும் வெளிச்சமே இல்லாமல் படமாக்கப் பட்டிருப்பதால் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கும் ஆக்‌ஷன் காட்சி களும் இருளில் கரைந்து விடுகிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லக்‌ஷ்மன்குமார் அதிக பொருட் செலவில் அமைத்திருக்கும் அரங்குகள் காட்சிகளை பிரமாண்டமாக்கியிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ஏறுமயில் பாடல் குத்தாட்டம்போட வைக்கிறது. சில வசனங்கள் காதில் விழாத அளவுக்கு இசை ஓவராகிவிடுகிறது.

குடிநீரை பெரு நிறுவனங்கள் எப்படி வியாபாரமாக்குகிறது. பாட்டில் நீரால் வரும் கேடுபற்றி வெட்ட வெளிச்சமாக இயக் குனர் பி.எஸ்.மித்ரன் துணிச்சலாக பேசியிருக் கிறார். பிளாஸ்டிக் கிற்கு தடை என்கிறது அரசு ஆனால் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்பனைக்கு மட்டும் எப்படி அனுமதிக்கிறது என்ற கேள்வியையும் எழுப்புயிருந்தால் அதற்கு ஒரு வழி பிறந் திருக்கும்.

சர்தார்- பாட்டில் நீர் அரசியலுக்கு வேட்டு.

Related posts

JoeMalloori as “Thillaiyar” in Velan

Jai Chandran

மகேந்திரன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ், சிவாங்கி பாடல்

Jai Chandran

Mohanlal’s ‘Vrusshabha’ Wraps Shoot

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend