Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சரத்குமார் குடியரசு தின வாழ்த்து

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் குடியரசு தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:

மக்களால், மக்களுக்காக, மக்களே ஆளும் ஆட்சி” என்ற வகையில் வலிமைவாய்ந்த மக்களாட்சியை அரசியலமைப்புச் சட்டம் வாயிலாக இந்தியாவில் நிலைநிறுத்திய நாளான ஜனவரி 26 – ந்தேதியை ஆண்டுதோறும் குடியரசு தினமாக உணர்வுடன் கொண்டாடி வருகிறோம்.

குடியரசு தின கொண்டாட்டம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான கடந்த காலத்தையும், நிகழ்காலத்தில் மக்களுக்கு நீதி கிடைக்கப்பெறு வதையும், எதிர்காலத்தில் தேசத்தின் வளர்ச்சியை பன்மடங் காக பெருக்குவது உள்ளிட்ட முக்காலத்துடனும் பொருத்தி பார்க்கும் தன்மையுடன் உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதற்கு அர்ப்பணிப்புடன் உன்னத பங்களிப்பாற்றிய விடுதலைப் போராட்ட வீரர்கள், நாட்டின் விடுதலைக்கு அரும்பாடுபட்டு செங்குருதி ஈந்து, இன்னுயிர் நீத்த தியாகிகள், சட்டம் இயற்றிய மாமேதைகளை இத்தருணத்தில் பெருமையுடன் நினைவுகூறு வோம்.

பெற்ற சுதந்திரத்தை பேணுவது போல, இந்தியாவின் முன்னோடிகள் வகுத்து கொடுத்தி  ருக்கும் சட்ட, திட்ட நெறிமுறை களுக்குட்பட்டு, கடமை மறவாது, உரிமை தவறாது செயல்படுவோம். அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிட்டது போல, சமத்துவம், சமூகநீதி, இறையாண்  மையை பாதுகாத்திடுவோம். இந்திய திருநாட்டின் 74 – வது குடியரசு தினம் கொண்டாடும் இந்திய மக்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ரா.சரத்குமார்  கூறியுள்ளார்.

Related posts

Suriya presents Karthi starrer Meiyazhagan

Jai Chandran

வா வாத்தியார் (பட விமர்சனம்)

Jai Chandran

The Songs and Trailer of “VIRUMAN” will be released infront of the fans.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend