நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் படம் சபாபதி. நவ.19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படக்குழு நேற்று பத்திரிகை, மீடியாவை சந்தித்தது. அப்போது நடிகர் சந்தானம் பேசியதாவது:
சபாபதி பட கதையை சில வருடங்களுக்கு முன்பே என்னிடம் இயக்குனர் சீனிவாசராவ் கூறியிருந்தார். அதில் சில திருத்தங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அவ்வபோது சொல்லும் மாற்றங்களை செய்ய தேவையான நேரம் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்து சொல்வார். அதில் இடம் பெறும் கணபதி வாத்தியார் பாத்திரத்துக்கு பொருத்தமானவர் கிடைத்தால் இந்த படம் செய்யலாம் இல்லாவிட்டால் செய்ய வேண்டாம் என்று கூறினேன். அந்த பாத்திரத்துக்கு பொருத்தமானவ ராக எம்.எஸ்.பாஸ்கர் கிடைத்தார் அதன்பிறகு ஷூட்டிங் தொடங்கினோம்.
சபாபதி பாத்திரத்தில் நான் நடித்தாலும் இது முற்றிலும் எனக்கு புதுமையான வேடம். திக்கி பேசி நடிககும் வேடம். இதுபோன்று வேடத்தில் பலர் நடித்திருக்கிறார் கள். கமல் சார் நடிக்காத வேடமில்லை. அந்த வகையில் பார்த்தால் நான் ஏற்கும்வேடமெல்ல லாம் பெரியது இல்லை. ஆனால் இதில் நடிக்க கஷ்டப்பட்டுத்தான் நடித்தேன். எனது பாத்திரம் எந்த இடத்தில் திக்கி பேச வேண்டும் என்று இயக்குனர் முடிவு செய்தார். அதன்படி நடித்தேன். இதுபோல் பேசி நடித்ததால் எனக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டது. டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்,.
இதில் நடித்துள்ள. புகழ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாக செய்துள்ளனர். சாம் சி.எஸ் கவனமுடன் செயல்பட்டு சிறப்பாக இசை அமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் விதி பற்றிய ஒரு பாத்திரத்துக்கு அற்புதமாக இசை அமைத்துள் ளார். தயாரிப்பாளர் ரமேஷ்குமார் டாக்குமெண்ட் வைத்துதான் படத்தை தொடங்கினார்.. அன்புசெழியன்சார்தான் பைனான்ஸ் உதவி அளித்தார். அவரே படத்தையும் ரீலீஸ் செய்கிறார். அவருக்கு நன்றி.
சினிமா 2 மணிநேரம் ஓடும் படம். எந்த படமாக இருந்தாலும், நாம் ஏதோ ஒரு கருத்தை பேசுகிறோம் என்றால், உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம் அதில் தப்பில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் தவறு, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசக்கூடாது.
யாரையும் உயர்த்தி பேசலாம், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில் லாத விஷயம். அடுத்தவங்களை புண்படுத்துற மாதிரி பேச கூடாது. இதுதான் என் கருத்து. எனென்றால், சினிமா என்பது 2 மணி நேரம் எல்லா மதத்தினரும், ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பது.
உங்கள் படத்தில் நீங்கள் யாரையும் உயர்த்தி பேசிக்கொள்ளுங்கள், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசாதீர்கள். அது தேவையில்லாத விஷயம். இனி வரும் இளைஞர்கள் சமூதாயத்திற்கு நல்ல சினிமாவை தர வேண்டும்.
2 மணிநேரம் செலவழித்து கவலைகளை மறந்து ஜாதி, மதம் கடந்து திரையரங்கு வருபவர் களுக்கு, அதற்கான விருந்தாக தான் திரைப்படம் இருக்க வேண்டும். நான் அதை செய்து கொண்டிருக்கிறேன். என் பக்கம் எதுவும் தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்ள வேண்டியதை திருத்திக்கொள் கிறேன்.
இவ்வாறு சந்தானம் பேசினார்.
இயக்குனர் சீனிவாசராவ், ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம், எடிட்டர் லியோ ஜான்பால், இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ்., நடிகர்கள். எம். எஸ்.பாஸ்கர், புகழ், நடிகை பிரீத்தி வர்மா ஆகியோர் படம் பற்றி விளக்கி பேசினார்கள். அனைவரையும் நிகில் முருகன் வரவேற்றார்.