பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.
அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன்,விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் .
என்.ஆர்..ரகுநந்தன் இசையில் ,வைரமுத்து பாடல் வரிகளில் ,பிரபல பின்னணி பாடகி சைந்தவி ஜி. வி.பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை நேற்று பாடியுள்ளார் . இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது என இசைமைப்பாளர் என்ஆர்.ரகுநந்தன் கூறியுள்ளார் .
நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி,பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ்
படbதயாரிப்பு -சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர்). பாடல்கள் வைரமுத்து.ஒளிப்பதிவு ஏ.ஆர்..அசோக் குமார்.. படத்தொகுப்பு சங்கத் தமிழன். நடனம் ராதிகா. சண்டை பயிற்சி : மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா .
தயாரிப்பு மேற்பார்வை இளையராஜா செல்வம்.
மக்கள் தொடர்பு ரியாஸ் கே அஹ்மத்.

