இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டார். தற்போது காலாபானி வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும் , பிரபுவும் மலையாள படமான “மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்”படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் . இந்த படத்தையும் பிரதர்ஷனே இயக்குகிறார் . தமிழில் இப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் எனும் பெயரில் கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார் .
மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு , அசோக் செல்வன்,பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா , போன்ற நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறார்கள் .
திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார் , எம் எஸ் ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக்கிறார் .ரோனி ரபேல் இசையமைக்கிறார் .ஆர்பி பாலா இப்படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார் . இதற்கு முன்பு மோகன்லால் படடங்களான புலி முருகன் , லூசிபர் ஆகிய பிரமாண்ட வெற்றி படங்களுக்கு இவர் வசனங்களை எழுதியுள்ளார் என்பது .குறிப்பிடத்தக்கது ,
இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது .
அதில் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது:
25 ஆண்டுகளுக்கு முன்பு சிறைச்சாலை என்ற படத்தை பிரியதர்ஷன் எனக்கு தந்தார். அந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்து .முன்னணி தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு வாரமும் படத்தை வெளியிட்டு முதலிடத்தை பிடித்தது. அடுத்து பிரமாண்டமாக 100 கோடி செல்வைல் உருவாகி இருக்கும் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தை தற்போது தமிழகத்தில் வெளியிட தந்திருக்கிறார்.
இயக்குனர் பிரியதர்ஷன் பேசியதாவது: தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் மரைக்காயர்அரபிக்கடலின் சிங்கம் எடுக்கலாம் மற்ற மொழிகளில் டப் செய்து கொள்ளலாம் என மோகன்லால் கூறினார் .அதனால் இப்படத்தை எடுக்க ஆரம்பித்தோம். கலைப்புலி தாணு வை தொடர்புகொண்டு, நீங்கள்தான் இப்படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய வேண்டும் என கூறினேன் . அவர்தான் என்னுடைய, நம்பிக்கை. இப்படத்தில் ப்ணியாற்றியவர்கள் குடும்பம் மாதிரி , என் மகள் கல்யாணி, பிரணவ் மோகன்லால், என்னுடைய உதவியாளர்கள், சுரேஷ் மகள் கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் நடித்துள்ளார்கள். பிரபு சார் இப்படத்தில் ஒரு கதாபாத்திரம் நடிக்க வேண்டுமென மோகன்லால் என்னிடம் கேட்டுக் கொண்டார். கேரளாவில் 639 தியேட்டர்களில் 632 தியேட்டரில் மரைக்காயர் வெளியாகிறது. படத்தின் ரிசர்வேஷன் மட்டும் 100 கோடியை தொட்டுள்ளது முதல் ஏழு நாட்கள் ஹவுஸ்ஃபுல். பெரிய ஓபனிங் மலையாளம் சினிமா கிடைத்துள்ளது.

இசையமைப்பாளர் ரோனி ரபேல் பேசியது:
நான் பிரியதர்ஷனுக்கும் கலைப்புலி தாணு சாருக்கும் கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது பிரியதர்ஷன் சார்தான். பல வருடங்களாக உதவி இசையமைப்பாளராக திரையுலகில் இருந்திருக்கிறேன்.வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி . பாடல்கள் மிகவும் அருமையாக வந்துள்ளது .அனைவருக்கும் நன்றி.
மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப குழு விவரம் வருமாறு:
எழுத்து & இயக்கம் பிரியதர்ஷன். தயாரிப்பு ஆசிர்வாத் சினிமாஸ் ( ஆண்டனி பெரும்பவூர்)
இணை தயாரிப்பு டி ஆர் ராய் சிஜே , சந்தோஷ் டி குருவில்லா.
தமிழ்நாடு வெளியீடு – வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பு வடிவமைப்பு சாபு சிரில். வசனம் ஆர்பி பாலா. ஒளிப்பதிவு திருநாவுக்கரசு. இசை ரோனி ரபேல்.
பின்னணி இசை ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லில் இவான்ஸ் ரோடர். நடனம் பிருந்தா , பிரசன்னா.
நிர்வாக தயாரிப்பு சுரேஷ் பாலாஜி ,ஜார்ஜ் டயல்.
