Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ருத்ரன் (பட விமர்சனம்)

படம்: ருத்ரன்

நடிப்பு: ராகவா லாரன்ஸ், சரத்குமார், பூர்ணிமா, காலி வெங்கட், பிரியா பவானி சங்கர், நாசர்

தயாரிப்பு: பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன்

இசை: ஜி. வி.பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்

இயக்கம்:கதிரேசன்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

தந்தை, தாய், தங்கை என அழகான குடும்பத் துடன் சந்தோஷமாக வலம் வரும் ருத்ரன் (லாரன்ஸ்) அனன்யா ( பிரியா)வை காதலித்து மணக்கிறான். ஒரு கட்டத்தில் ருத்ரன் தந்தை 6 கோடி ரூபாய் கடன் வாங்கி அதை நண்பனிடம் பறிகொடுக்கிறார். குடும்ப கடனை அடைக்க லண்டனுக்கு வேலை பார்க்க செல்கிறான் ருத்ரன். இந்நிலையில் அவனது தாய் இறக்கிறார். மனைவியும் காணாமல் செல்கிறாள். அதிர்ச்சி அடைந்த ருத்ரன் வீடு திரும்பி தன் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவங்களை அறிந்து
குடும்பத்தை சீரழித்த வில்லன் பூமியை (சரத்குமார்) எப்படி பழிவாங்குகிறான் என்பதே கதை.

பழிவாங்கும் கதை என்றாலும் தாய் பாசம், காதல், மனைவி, குழந்தை என குடும்ப சென்டி மென்ட்டையும் கலந்து முதன் முறையாக படத்தை இயக்கியி ருக்கிறார் கதிரேசன்.

எல்லாவற்றையும் அளவுடன் கலந்தவர் சண்டை காட்சிகளில் மட்டும் ஏன் இப்படியொரு பில்டப் கொடுத்தார் என்று புரியவில்லை.

ராகவா லாரன்ஸ் நடன காட்சி களில் தனது முத்திரையை வழக்கம்போல் பதித்துள்ளார். என்னதான் ஆக்ரோஷமான சண்டை காட்சி என்றாலும் அதற்காக ஜெயன்ட் ராட்டின இரும்பு ராடை பிடுங்கி தாக்குவது, ஒரே கையில் ரவுடியை குத்தி அந்தரத்தில் தூக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் நம்பகத் தன்மையை இழந்து விமர்சனத் துக்குள்ளாகிறது.

நாட்டாமை சரத்குமார் தனது ஹீரோ பாலிசி யை மாற்றிக் கொண்டு கொடூர வில்லனாக மாறியிருப்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் தருகிறது.

பிரியா பவானி – லாரன்ஸ் காதல் காட்சிகளில் நெருடல் இல்லை.
நடன காட்சிகளில் லாரன்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி விடுகிறார் பிரியா.

படத்தில் ரொம்பவே ஸ்கோர் செய்கிறார் பூர்ணிமா பாக்யராஜ். தாய் பாசத்தை அழகாக வெளிப் படுத்தும் அவர் தன்னை ரவுடிகள் கொன்ற பிறகு சடலமாக நடிக்கும் காட்சிகளில் ரொம்பவே மனதை பாரமாக்கி விடுகிறார்.

வெளிநாடு சென்று செட்டிலாகி குடும்பத்தை மறந்த இளைஞர் களுக்கு சரியான படிப்பினையை தரும் கதையை பொட்டில் அறைந் தார் போல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கதிரேசன்.
என்னவொன்று ஏற்கனவே சொன்னதுபோல் சண்டை காட்சி களில் உணர்ச்சி வசப்பட்டு தந்திருக்கும் பில்டப்பை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

ஜி.வி.பிரகாஷ் இசை லாரன்ஸின் நடனத்துக்கு தீனி போட்டிருக் கிறது.

ஆர். டி.ராஜசேகர் ஒளிப்பதிவு படம் முழுக்க ஆக்ஷன் மூடை பரப்பு கிறது.

ருத்ரன் – ஆக்ஷன் பிரியர்களின் ஸ்பெஷல்.

Related posts

தமிழ் பட பத்திரிகையாளர்கள் சங்க தீபாவளி விழாவில் பி.சுசீலா

Jai Chandran

Engada Iruthinga Ivvalavu Naala

Jai Chandran

MAGASAR – A Riveting Edge-of-Seat Revenge Thriller

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend