படம் ரூட் நம்பர் 17
நடிப்பு: ஜித்தன் ரமேஷ், அஞ்சு ஓன்டியா, ஹரிஷ் பெராடி, டாக்டர் அமர் ராமச்சந்திரன், ஜெனிபர், மாஸ்டர் நிஹால், டிட்டுஸ் ஆப்ரகாம், பெரோலிக் ஜார்ஜ், அகில் பிரபாகர்
தயாரிப்பு: நேநி என்டர்டெயின் மென்ட் அமர் ராமச்சந்திரன்
இசை:அவுசி பச்சான்
ஒளிப்பதிவு: பிரசாந்த் பிரணவம்
இயக்கம்: அபிலாஷ் ஜி தேவன்
பி ஆர் ஒ: ஏ.ஜான்
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்து நடக்கிறது அந்த விபத்தில் என்ஜினியர் அவரது மனைவி இறந்து விடுகிறார்கள். அவர் களது மகன் மட்டும் தப்பிக் கிறான். அவனையும் கொல்ல ஒரு கூட்டம் முயல அந்த நேரத்தில் யாரோ வருவதை அறிந்து அந்த கூட்டம் எஸ்கேப் ஆகிறது. காட்டுப் பகுதியில் உயிர் தப்பிய சிறுவன் வளர்ந்து ஆளாகி அங்கேயே தங்கி இருக்கிறான். இந்த நிலையில் ஒரு காதல் ஜோடி காட்டுப் பகுதிக்குள் செல்கிறது. அந்த ஜோடியை திடீரென்று ஒரு மர்ம உருவம் கடத்தி பூமிக்கு அடியில் தோண்டப்பட்ட சுரங்க அறையில் அடைத்து சித்திரவதை செய்கிறது இந்நிலையில் இளம் ஜோடி காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் ஆகிறது. போலீ சார் ஜோடியை தேடி காட்டுப் பகுதிக்குள் வருகின்றனர். இதற்கி டையில் ஜோடியை கடத்திய மர்ம ஆசாமி காதலனை கொன்றுவிட்டு காதலியை சித்திரவதை செய்கி றான். அவனிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போகிறது. இந்த நிலையில் அந்த பகுதிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜோடியை தேடி வருகிறார். அவரையும் மர்ம மனிதன் கடத்து கிறான். இந்த விஷயத்தில் புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஆர்வம் காட்டாததால் போலீஸ் கான்ஸ்டபிள் களத்தில் இறங்கி காணாமல்போனவர்களை மீட்க போராடுகிறார். அவரால் அவர் களை மீட்க முடிந்ததா? மர்ம மனிதனின் கதி என்ன? என்ற கேள்விகளுக்கு படம் பதில் அளிக் கிறது
சமீப காலமாக ஜித்தன் ரமேஷ் ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரூட் நம்பர் 17 படத்தில் ஸ்டப் உள்ள ஆக்ஷன் ஹீரோவாக நடித்தி ருக்கிறார் அதுவும் ஒரு சைக்கோ வாக நடித்துள்ளார். அவரது நடிப்பு ஓரளவுக்கு எடுபடவே செய்கிறது. பார்த்தாலே பயமுறுத்தும் அளவிற்கு பேய் போன்று நீண்ட முடி வைத்துக் கொண்டிருப்பதுடன் பாய்ந்து, மறைந்து தாக்கும் யுக்தி களையும் ஜித்தன் ரமேஷ் பயன் படுத்தும் போது காட்சிகள் திக் திக் என நகர்கின்றன.
காணாமல் போன ஜோடிகளை கண்டுபிடிக்க இரவில் தனியாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீரென மர்ம உருவம் தாக்கிய தால் அங்கேயே மயங்கி விடுகி றார். அவரையும் அந்த உருவம் சுரங்கத்தில் அடைத்து வைக். கிறது.
இப்படி மர்மமாக அடைத்து வைக் கப்படவர்களை எந்த ஹீரோ வந்து காப்பாற்ற போகிறாறோ என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது ஒரு டுஸ்ட் தரும் விதமாக கான்ஸ் டபிளாக வரும் அருவி மதன் திடீரென்று களத்தில் இறங்கு கிறார். மற்றொரு ஹீரோவை போட்டால் பட்ஜெட் எகிறும் என்ப தால் இவரையே செகண்ட் ஹீரோ வாக இயக்குனர் ஆக்கியிருப்பார் போலிருக்கிறது. ஜோடிகளை தேடும் வேலையை அருவி மதனே மேற்கொள்கிறார். அதேசமயம் காட்டுக்குள்ளேயே துப்பறியும் வேலையையும் தொடங்கி விடுகி றார்.
ஜித்தன் ரமேஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தில் மாறுபட்ட ஒரு வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார் அவரது தலைவிரி கோலமும், அழுக்கு நிரம்பிய ஆடையும் பயமுறுத்தவே செய்கிறது.
பூமிக்கு அடியில் இருக்கும் அறைக்கு தலைகீழாக இறங்கும் ஜித்தன் ரமேஷ் பின்னர் தாவி குதித்து கதாநாயகி அஞ்சுவை மிரட்டி அவரை சேற்றில் தள்ளி உருட்டி புரட்டி தோளில் சுமந்து சென்று தொப்புக்கடிர் என்று கீழே போட்டு படாதபாடுபடுத்தி எடுக்கி றார்.
ஜித்தன் ரமேஷுக்கு பெரிதாக வசனம் இல்லாவிட்டாலும் சைக் கோதனமாக சிரித்து தனது காட்சி களை பூர்த்தி செய்கிறார்
சிறுவயதில் காட்டுக்குள் சென்ற ரமேஷ் தன் பெற்றோரை கொன்ற வர்களை பழிவாங்கும் அளவுக்கு வளரும் வரை காட்டிலேயே எப்படி வளர்ந்தார், அவருக்கு எப்படி தன்னுடைய பள்ளி புத்தகங்கள் கிடைத்தன, சுரங்கத்தில் கொளுத்தி வைக்க மெழுகு வர்த்திகள் எப்படி கிடைத்தன என்பன போன்ற சில கேள்வி களுக்கு சரியான பதில் இல்லை
பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ஜித்தன் ரமேஷுக்கு உதவி செய்தது போல விசாரணையில் ஒரு சில வசனங்கள் மூலம் மேற்குறிப்பிட்ட லாஜிக் மிஸ்ஸிங் கை சமாளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். அந்த சமாளிபிகே ஷனை வசன ரீதியிலும் இயக் குனர் சொல்லி இருந்தால் குழப்பம் தீர்ந்திருக்கும்.
படத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருப்பது பட கதாநாயகி அஞ்சு ஒண்டியா தான். எந்நேரமும் உடம்பில் சேரும் சகதியுமாக இருப் பதுடன் ஜித்தன் ரமேஷ் அவரை அந்தரத்தில் தூக்கி தரையில் போட்டு உருட்டி புரட்டி எடுப்பதெல் லாம் முரட்டுத்தனமாக இருக்கிறது. அவ்வளவு உருட்டல் புரட்டல்களை யும் எப்படி தாங்கி சமாளித்து நடித்தார் என்பது ஆச்சரியமாகவே உள்ளது. அஞ்சுவின் காதலனாக வருபவர் கொஞ்ச நேரமே வந்து தனது கேரக்டரை ஏற கட்டி விட்டு செல்கிறார்
மந்திரியாக வரும் ஹாரிஸ் பெராடி சைலன்டாக வில்லத்தனத்தை செய்கிறார்.
அருவி மதனுக்கு கொஞ்சம் வித்தி யாசமான கேரக்டர்தான். போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருந்தாலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்துமுடிக்கிறார். அவரே துப்பு துலக்கும் போலீசாக மாறி பைல் களை புரட்டிப் பார்ப்பது ஆதாரங் களை சேகரிப்பது காணாமல் போன இன்ஸ்பெக்டரை கண்டு பிடிப்பது என்று பல ஜேம்ஸ்பாண்ட் வேலை களை செய்து நடித்திருக் கிறார்.
போலீஸ் ஸ்டேஷன், வீடு காட்டுப் பகுதி என்று மூன்று இடங்களை தான் முழு கதையும் சுற்றி வருகி றது பெரும்பாலான காட்சிகள் இப்படத்திற்காக அமைக்கப்பட்ட ட பாதாள அறையிலேயே நடக்கிறது
இதில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் தேவை யான வேலையை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்தில் ஆக்சன் காட்சிகள் இருக்கிறது ஆனால் காமெடிக்கு கொஞ்சமும் இடமில்லை.
பாதாள அறைக்குள்ளயே சூட்டிங் பெரும்பகுதி முடித்திருப்பது சோர்வை தருகிறது
படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களில் ஒன்றில் கிக்கும் இன்னொன்றில் தாலாட்டும் செழித்து ஒலிக்கிறது. மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர் அவுசிபச்சன் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தமிழில் அறிமுகமாகி இசையமைத்தி ருக்கிறார். தான் ஒரு கைதேர்ந்த இசையமைப்பாளர் என்பதை படத்திற்கு தேவையான இசை தந்ததன் மூலம் நிரூபித்திருக் கிறார். படம் கொஞ்சம் பேசப்பட் டால் ஹவுசி புச்சனுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம் மூடுக்கு ஏற்ற லைட்டிங் செய்து காட்சிகளுக்கு உயிரூட்டி யிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் இது பேய் படமாக இருக் குமோ என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு ஆரம்ப காட்சிகளில் ஜிமிக்ஸ் வேலைகளை காட்டி பரபரப்பை கூட்டுகிறார்
இயக்குனர் அபிலாஷ் ஜி தேவன் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். காட்சி களை நம்பகத்தன்மையுடன் இயக்கியிருப்பது மனதில் பதி கிறது. ஜித்தன் ரமேஷ் இடம் இவ்வளவு வேலை வாங்கி இருப்பது இவராகத்தான் இருக்கும். கதாநாயகி அஞ்சுமீது என்ன கோபமோ தெரியவில்லை அவரை பெண்டு நிமிர்த்தியிருக் கிறார்.
ரூட் நம்பர் 17 – பயமுறுத்தும் கிரைம் திரில்லர்.