படம்: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நடிப்பு: யூ ட்யூப் கோபி, சுதாகர்,. முனிஸ்காந்த், சத்யமூர்த்தி, ஜார்ஜ் மரியான், நடிகைகள் யாஷிகா, ரித்விகா, ‘எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா கிரேன் மனோகர், விஜயகுமார், ராஜேந்திரன்
தயாரிப்பு: அக்ஷயா பிக்சர்ஸ் த.ராஜன்
இசை: கவுஷிக் கிருஷ்
இயக்கம் : ரமேஷ் வெங்கட்
பி ஆர் ஒ: சதீஷ்குமார்
காமெடி என்றால் கூப்பிட்றா அந்த பேயை என்ற ரேஞ்சுக்கு ஏற்கனவே பல படங்கள்ல பேயோட நெலமய வெச்சு செஞ்சிட்டாரு சந்தானம்.. அந்த பாணியைத்தான் ஓ மு ஒ மு டீமும் கையிலெடுத் திருக்கிறது.
எப்படியாவது சினிமாவுல சாதிக்க வேண்டும் என்கிற இளைஞர்கள் சிலர், சில மாணவர்கள், ஐ டியில் வேலை பார்க்கும்.2 பெண்கள், கள்ளக் காதல் ஜோடி என ஒரு செட் ஏதேச்சையாக “வாங்க அங்கிள் விளையாடலாம்” என்ற பிட்டு படம் பார்க்க தியேட்டருக்கு செல்கி றார்கள். ஆவலா படம் பார்க்கத் தொடங்கியதும் சில அமானுஷ் யங்கள் நிகழ்கிறது. இதில் பயந்து போன இந்த கூட்டம் தியேட்டரி லிருந்து எஸ்ஸாக முயன்று தலை தெறிக்க வெளியே ஓடுகின்றனர். ஆனாலும் மீண்டும் தியேட்டடருக் குள்ளேயே அவர்கள் வருகின் றனர். இதில் நடுங்கிப் போன வர்கள் அங்கிருந்து தப்பிக்க முடிந்ததா? அவர்களை அந்த தியேட்டரில் இருக்கும் பேய்கள் என்ன செய்தது. பேய் அவர்களிடம் வைக்கும் டிமாண்ட் என்ன என்பதற்கு கலகலப்பாக படம் பதில் சொல்கிறது.
கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் சொல்லும் வசனத்தை இப்படத்துக்கு டைட்டிலாக்கியிருக் கிறார்கள்.
யூ டியூப்பில் மில்லியன் கணக்கில் வியூஸ்களை வாங்கி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கோபி, சுதாகர் ஆகியோருடன் யூ டியூப்பில் இன்னொரு பக்கம் கலக்கும் எருமசாணி டீம் இணைந்து பெரிய திரையில் கிச்சு மூட்ட முயன்றிருக்கிறார்கள்.
பேயை பார்த்தால் பயமே போய் விடும் என்ற அளவுக்கு பேய் களுக்கு பெரிசா திகில் பயமுறுத்தல் இல்லாமல் செய்தி ருப்பதால் அதற்கான பிளாஷ் பேக்கும் பிசுபிசுக்கிறது. படத்தில் வில்லன் யார் என்றால் முனிஸ்காந்த் தான். வில்லன் பேர கேட்டாலே கலகலன்னு சிரிப்பு வருதில்ல.. அப்புறம் அவர் எப்படி வில்லத்தனத்த செய்வாரன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க
யூ ட்யூப் பிரபங்கள் இணைந்து நடித்திருப்பதால் அதே பாணியில் சினிமாவிலும் பேசி சிரிக்க வைக்க முயல்கிறார்கள் அது ஓரளவுக்கே எடுபடுகிறது. ரசிகர்கள் சிரிப்பை பார்த்து உதட்டை பிதுக்கினாலும் ரசிகைகள் கொல்லென சிரிக்கவே செய்கிறார்கள்.
யூடியூப் பார்க்காத கண்களுக்கு தெரிந்த முகமாக யாஷிகாவும்,. முனிஸ்காந்தும் திரையில் தோன்றுவது கொஞ்சம் ஆறுதல்.
கவுஷிக் கிருஷ் பின்னணி இசை லேசாக பயமுறுத்துகிறது. இதற்கு மேலும் பில்டப் தருவதற்கு ஏற்ற பயமுறுத்தல் காட்சிகள் இல்லாதது ஒரு மைனஸ்
ஒளிப்பதிவு ஓகே ரகம்
இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கியிருக்கிறார். சினிமா வுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட்டாக்க இன்னுமும் கதைக்கு கருவம் வலுவும் தேவைப்படுகிறது. திரைக் கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது – டைட்டில்தான் அப்படி ரசிகர்களுக்கு அப்படியல்ல..
