படம்: ஏ லெஜன்ட் ( தமிழில் விஜயபுரி வீரன் என பெயர் மாற்றம்)
நடிப்பு: ஜாக்கி சான், லே சஹாங், குல் நெசர்பெஸ்டியர் ,, லி சான்.
தயாரிப்பு: போனா பிலிம்.குரூப்
இசை: நாதன் வாங்க்
ஒளிப்பதிவு: ஜிங்கில் மா
இயக்கம்: ஸ்டேன்லி டாங்
வெளியீடு: விஸ்வாஸ் பிலிம்ஸ் வி சுந்தர்
பி ஆர் ஓ: நிகில் முருகன்
ஜாக்கி சான் ஏற்கனவே நடித்து வெளியான தி மித், குங்ஃபூ யோகா ஆகிய படங்களின் அடுத்த பாகமாக ஏ லெஜன்ட் உருவாகி இருக்கிறது. அந்த இரண்டு படங்களின் தொடர்ச்சியாக இருந்தாலும் பொதுவான ஒரு கதையாக இப்படம் உருவாகி இருப்பதுடன் ஜாக்கி சான் கதாபாத்திரமும் அந்த இரண்டு படங்களிலிருந்து இதில் மாறுபட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஏ லெஜன்ட் படம் தமிழில் விஜயபுரி வீரன் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தது போல் இருக்கிறது இப்படத்தின் காட்சிகள்.
ஜாக்கி சான் பெயர் வீராங்கா கதாநாயகி பெயர் பூங்குழலி என்று சுத்த தமிழ் பெயர்களாக கதாபாத்திரங்களுக்கு வைக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்களும் இலக்கிய தமிழ் வசனங்கள் பேசுவதெல்லாம் படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
விஜயபுரியை கைப்பற்ற வருகிறது கபாலபுர படை. விஜயபுரி வீரன் வீரங்கா தனது உதவி போர் வீரனுடன் இணைந்து கபாலபுரம் படையை எதிர்த்து போரிட்டு எப்படி அந்த படையை முறியடிக்கிறான் என்பதுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன பொக்கிஷம் அடங்கிய ஒரு அரண்மனையை ஒரு அகழ்வாராய்ச்சி குழு எப்படி கண்டுபிடிக்கிறது என்பதே கதை.
அகழ்வாராய்ச்சி பேராசிரியராக ஜாக்கி சான் நடித்திருக்கிறார் அவரது உதவியாளராக லே சஹாங் நடித்துள்ளார்.
விஜய்புரி நாட்டு போர் வீரனாக வரும் ஜாக்கி சான் முற்றிலுமாக ஏ ஐ என்ற நவீன கிராபிக்ஸ் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருப்பது. ஆரம்பகால கட்ட படங்களில் ஜாக்கி சான் எப்படி இளமை தோற்றத்தில் இருந்தாரோ அதே இளமை தோற்றத்துக்கு இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதுதான் ஆச்சரியம்.
தற்போதுள்ள வயதான ஜாக்கி சான் எப்படி இவ்வளவு இளமையாக மாறிவிட்டார் என்று ஆச்சரியம் ஒவ்வொரு சீனுக்கும் மேலோங்கும்போது இளமை ஜாக்கிசான் ஆச்சரியத்தை அதிகப்படுத்தி கொண்டே போகிறார்.
தற்போதுள்ள தோற்றத்திலும் அகழ்வாராய்ச்சி பேராசிரியராக ஜாக்கி சான் வருவது கூடுதல் ஆச்சரியம்.
படத்தில் மற்றொரு பிரமிப்பு. குதிரைப்படை. ஆயிரக்கணக்கான குதிரைகளை எங்கிருந்து பிடித்து வந்தார்களோ தெரியவில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் குதிரைப்படை திரண்டு வருவது அபாரம். ஒருவேளை இது கூட கிராபிக்ஸ் புத்தியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆருக்கும நம்பியாருக்கும் இடையே நடக்கும் கத்திச் சண்டையை ஞாபகப்படுத்தும் வகையில் ஜாக்கிசானுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் கத்திச் சண்டை அரங்கை திணறடிக்கிறது.
கிளைமாக்சில் வரும் அந்தப் பனிக் குகை, ஐஸ் கட்டிகளால் உருவாக்கப்பட்ட அரண்மனை தூண்கள் எல்லாம் கண்ணுக்குள் குளிர் மழை பொழிகிறது.
இளவரசியாக வரும் குல் நெசர்பெஸ்டியர் மனதில் இடம் பிடிக்கிறார்
ஏ லெஜன்ட் (விஜயபுரி வீரன்)-எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன், ராஜமவுலியின் மகதீரா இரண்டு படங்களையும் ஒன்றாக பார்த்த உணர்வு..

