Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

13 வது ஆண்டில் ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம்…

தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் ஆர்.கே.சுரேஷ். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று பல தளங்களில் இயங்கிவரும் இவர் விஜய்சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற வெற்றிப் படத்தை விநியோகித்தவர். தொடர்ந்து விஜய்சேதுபதியின் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘சூது கவ்வும்’, இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’, ‘பீட்சா’, ‘6 மெழுகுவர்த்திகள்’, ‘கோழி கூவுது’, ‘தங்க மீன்கள்’, ‘மதயானை கூட்டம்’, ‘சாட்டை’, ‘அய்யாவு’(இந்தி), ஹீரோயின் (இந்தி) உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களை ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிறுவனம் விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’, விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’, ‘அட்டு’, ‘அமீரா’
போன்ற வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளது.

திரைத்துறையில் ஸ்டூடியோ 9 நிறுவனத்துக்கு இது 13 வது ஆண்டு. இந்த ஆண்டில் ‘டிரைவர்’, ‘குரு பூஜை‘ போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

தயாரிப்பாளர், விநியோகஸ்தராக மட்டுமல்லாமல் 2013 ஆம் ஆண்டிலிருந்து நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் ஆர்.கே.சுரேஷ். ‘தாரை தப்பட்டை’, ‘மருது’, ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இப்படை வெல்லும்’, ‘பள்ளிப்பருவத்திலே’, ‘ஸ்கெட்ச்’, ‘டிராபிக் ராமசாமி’, ‘பில்லா பாண்டி’, ‘நம்ம வீட்டுபிள்ளை’, ‘வேட்டை நாய்’, ‘கொச்சி ஷாதி (மலையாளம்), ‘சிவலிங்கபுரம் (தெலுங்கு) உட்பட சுமார் 25 படங்களில் நடித்து நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ஆர்.கே.சுரேஷ் அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

விரைவில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘விசித்திரன்’, ‘காடுவெட்டி’ வெளியாகவுள்ளது. இதில் ‘விசித்திரன்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பாலா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் கூறுகையில், ‘இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். திரைத்துறையில் இவ்வளவு ஆண்டு காலமாக நீடித்து இருப்பதற்கு மக்களும், திரைத்துறையினரும் அளித்த ஆதரவு மட்டுமே காரணம். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு உதவிய ரசிகர்கள், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் இந்த இனிய தருணத்தில் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.

 

Related posts

First Look of Vishal31 VeerameVaagaiSoodum

Jai Chandran

Spotted! Bheem and Ramaraju hooked onto the Dosti song

Jai Chandran

Big Bull Song From Ram Pothineni’s Double ISMART Out Now’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend