Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எண்ணித்துணிக (பட விமர்சனம்)

படம்: எண்ணித்துணிக

நடிப்பு: ஜெய், அதுல்யா ரவி, பம்சி கிருஷ்ணா, அஞ்சலி நாயர், வித்யா பிரதிப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, குரைசி

தயாரிப்பு: சுரேஷ் சுப்ரமணியன்

இசை: சாம் சி.எஸ்

ஒளிப்பதிவு: ஜெ.பி. தினேஷ்குமார்

இயக்கம்: எஸ்.கே. வெற்றிசெல்வன்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா

2000 கோடி மதிப்புள்ள வைரத்தை சென்னையில் உள்ள அமைச்சரிடமி ருந்து கொள்ளையடிக்க அமெரிக்கா விலிருந்து ஒரு கடத்தல் கூட்டம் திட்டமிடுகிறது. அந்த பொறுப்பை வம்சி கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கின் றனர். கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு நகைக்கடைக்குள் முகமூடி அணிந்து செல்லும் வம்சி அங்கு சிலரை சுட்டுக் கொன்றுவிட்டு வைரத் தையும் நகைகளையும் கொள்ளை யடித்துவிட்டு தப்புகிறார். இந்த கடையில் தன் திருமணத்துக்காக நகைகள் வாங்க ஜெய்யின் காதலி அதுல்யா வருகிறார். கொள்ளையர் களின் துப்பாக்கி சூட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்படுகிறார். பாதிக்கப்பட்ட ஜெய் கொள்ளை கூட்டத்தை பழிக்குபழி வாங்க புறப்படுகிறார். அவர்களை எப்படி பழிதீர்க்கிறார என்பதே கிளைமாக்ஸ்.

வழக்கமான் சாக்லெட் பாய் போன்றில் லாமல் இதில் ஆக்‌ஷன் அதிரடி ஹீரோவாக மாறியிருக்கிறார் ஜெய்.

அதுல்யா ரவி கொள்ளையர்களால் சுடப்பட்டதையறிந்து அதிர்ச்சி அடையும் ஜெய் அந்த கூட்டத்தை கண்டுபிடித்து பழி வாங்க புறப்பட்டு கொள்ளையர்களை அடையாளம் காண ஒவ்வொரு இடமாக விசாரித்து அவர்களை நெருங்குவதும் ஒரு கட்டத்தில் கொள்ளயன் வம்சி முன் போய் நின்று அவருடன் மோதுவதும் விறுவிறுப்பான நகர்வுகள்.

அதுல்யாதான் மருத் வமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக் கிறார் என்று என்று எண்ண வைத்து திடீரென்று மருத்துவமனையில் பிழைப்பது அஞ்சலி நாயர் என்று காட்சி மாறுவது சரியான திருப்பம். அதன் பிறகு கதை முழுவதும் அஞ்சலி நாயரை சுற்றி பயணிக்கிறது.

அஞ்சலி நாயரை கொல்ல வரும் ரவுடிகளுடன் ஜெய் மோதும் கல்லறை சண்டை காட்சியும், கிளைமாக்ஸில் வம்சியுடன் மோதும் காட்சியிலும் ரிஸ்க் எடுத்து சண்டையிட்டிருக்கிறார் ஜெய்.

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஏற்ப உடற்கட்டையும் ஜெய் கட்டுக்கோப் பாக மாற்றிக் கொண்டால் கூடுதல் பிளஸ் ஆக இருக்கும். சென்டி மென்ட்காட்சிகளில் ஜெய் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

அதுல்யாவுக்கு பெரிதாக வாய்ப்பில்லை. இரண்டு பாடல் காட்சியில் கலர்ஃபுல்லாக டூயட் பாடுகிறார்.

அஞ்சலி நாயருக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியி ருக்கிறார்.

சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்திருக் கிறார்.

சாம் சி.எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பிளஸ்.

ஜெ.பி. தினேஷ்குமார் ஒளிப்பதிவும் காட்சிகளை தாங்கிப்பிடிக்கிறது

எஸ்.கே. வெற்றிசெல்வன் ஒரு ஆக்‌ஷன் கதையை எவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லமுடியுமோ அவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். ஆக்‌ஷனுடன் ரிலாக்ஸுக்கு கொஞ்சம் காமெடி நட்சத்திரங்களையும் பயன்படுத் தியிருந்தால் சுவை கூடியிருக்கும்.

எண்ணித்துணிக- இயக்குனர் மீது நம்பிக்கை வைத்து ஜெய் ஆக்‌ஷன் ஹீரோவாக துணிந்து பாஸாகியிருக் கிரார்.

Related posts

BoyapatiRAPO Massive Updates Rolling out on Dussehra, OCT 5

Jai Chandran

தமன் நடிக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ இசை வெளியீடு

Jai Chandran

ஜீவா & ஆண்ட்ரியா உடன் ZEE5 பொங்கல் கொண்டாட்டம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend