Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரெட்ட தல (பட விமர்சனம்)

படம்: ரெட்ட தல

நடிப்பு: அருண் விஜய் (இரு வேடம்), சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ்

தயாரிப்பு: பாபி பாலச்சந்திரன்

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு: டிஜோ தாமி

இயக்கம்: கிருஷ் திருக்குமரன்

பிஆர்ஓ: சதீஷ் (Team AIM)

சிறுவயதில் அனாதையாக திரியும் காளிக்கு (அருண் விஜய்) தோழியாகும் சிறுமி (சித்தி இத்னானி) வளர்ந்த பிறகும் தோழியாகவே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள காளி விருப்பம் தெரிவிக்கும்போது “உன்னிடமும் பணம் இல்லை, என்னிடமும் பணம் இல்லை. நாம் திருமணம் செய்து என்ன பயன். நான் வெளிநாடு சென்று செட்டிலாகிறேன்” என்று பதில் சொல்கிறார். இந்நிலையில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. திடீரென்று காளி பணக்காரன் ஆகும் சூழல் ஏற்படுகிறது. அதை பார்த்தவுடன் அவருடனே தங்க திட்டமிடுகிறாள் தோழி. திடீரென்று காளி பணக்காரன் ஆவது எப்படி? அவர்களது காதல் நிறைவேறியதா? என்ற கேள்விகளுக்கு ரெட்ட தல கிளைமாக்ஸ் பதிலளிக்கிறது.

அருண் விஜய்க்கு ரொம்பவும் ஸ்டைலிஷான படமாக இது அமைந்திருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் .

இரட்டை வேட கதாபாத்திரத்தில் தடயம் படத்தில் அருண் விஜய் ஏற்கனவே நடித்திருக்கிறார். அந்த படம் வெற்றியும் பெற்று இருக்கிறது. இந்த படத்தில்  அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள். காளி என்ற லோக்கல் இளைஞன், மர்மம் நிறைந்த உபேந்திரா என்ற பணக்கார கதாபாத்திரம்.என  இருமாறுபட்ட நடிப்பை வித்தியாசமாகவே வழங்கியிருக்கிறார்.

அருண் விஜய்க்கு சண்டைக்காட்சி என்றால் லட்டு சாப்பிடுவதுபோல் தான். இந்த படத்திலும் சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்யிருக்கிறார். குறிப்பாக இரண்டு அருண் விஜய் மோதிக் கொள்ளும் காட்சி இன்னும் கொஞ்சம் நீளாதா என்று ஆர்வத்தை தூண்டுகிறது.
அதேபோல் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மற்றும் மாலில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் அதிரிபுதிரி காட்டுகிறார்.
காதல் காட்சிகளில் மட்டும் அருண் விஜய் நெருக்கம் காட்டாதது ஏனோ தெரியவில்லை.. வாய்ப்பு கிடைத்தால் இளம் ஹீரோக்கள் புகுந்து விளையாடுகிறார்கள் இவருக்கு வாய்ப்பு கிடைத்தும் தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் நடித்திருக்கிறார்.

கதாநாயகி சித்தி இத்னானி கொழுக் மொழுக் என்று வருகிறார். அதேசமயம் பணத்தாசை பிடித்தவராக நடித்திருப்பது அவரது கதாபாத்திரத்தை நெகட்டிவ் பத்திரமாக சித்தரிக்கிறது. ஆனாலும் அது பற்றி கவலைப்படாமல் நடித்திருப்பது அவர் தனது கதாபாத்திரத்தில் ஏதோ ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று எண்ணி பாத்திரங்களை தேர்வு செய்பவர் என்று தெரிகிறது.

மேலும் தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

பாபி பாலச்சந்திரன் படத்தை தயாரித்திருக்கிறார்.

சாம் சி எஸ் பின்னணி இசை  அதிர விடுகிறது.

கேமராமேன் டிஜோ தாமி  கலர் டோனில வித்தியாசத்தை காட்டி காட்சிகளை ஹாலிவுட் ஸ்டைலில்  படமாக்கி இருக்கிறார்.

இயக்குனர் கிருஷ் திருக் குமரன் ஆக்சன் கலந்த காதல் கதையை தர முற்பட்டிருக்கிறார். திடீரென்று காளி கதாபாத்திரத்தை இன்டர்நேஷனல் டான் அளவுக்கு காட்டும்போது அதற்கான பின்னணி காட்டாதது கதையோடு ஒட்டவில்லை. கிளைமாக்சில் ஒரு சஸ்பென்ஸ் விட்டிருக்கிறார். அதற்கு பதில் இரண்டாம் பாகத்தில் கிடைக்கும் என்று படக் குழு சொல்கிறது.
காதல் ஆக்சன் கலந்த கௌதம் மேனன் ஸ்டைல் பாணியில் படம் தர எண்ணி இருக்கும் இயக்குனர் பாடல் காட்சிகளில் கவனம் செலுத்தி இருந்தால் அது நிறைவேறி இருக்கும்.

ரெட்ட தல – கமர்சியல் பொழுதுபோக்கு..

 

Review by
K.Jayachandhiran

www.trending cinemas now.com

Related posts

கர்நாடக முதல்வருடன் தேசிய தலைவர் பட நாயகன் ஏ.எம்.பஷீர் சந்திப்பு

Jai Chandran

பரோல் திரைவிமர்சனம்

Jai Chandran

Methagu in Bs Value App From June 25th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend