Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆகாயத்தில் ஓர் தாரகை (பட விமர்சனம் )

படம்: ஆகாயத்தில் ஓர் தாரகை

நடிப்பு: துல்கர் சல்மான், சாத்மிகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ரூஹானி சர்மா, நாசர், கௌதம் வாசுதேவ்மகன், முரளி ஷர்மா சுவாசிகா, கோட்டா ஜெயராம், மான்சி சுதீர், சின்னி ஜெயந்த், பிரவீன், காசிரெட்டி சைதன்யா ஜன்னலகட்டா

தயாரிப்பு: சந்திப் குன்னம், ரம்யா குன்னம்

இசை: ஜிவி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : சுஜித் சாரங்

இயக்கம்: பவன் சதினேனி

பி ஆர் ஒ : யுவராஜ்

கதை: குக்கிராமமொன்றில் ஏழை குடும்பத்தில் பிறக்கிறார் கல்பனா (சாத்மிகா வீரவல்லி). பத்தாம் வகுப்பு படித்த நிலையில் அவரது தந்தை திருமண ஏற்பாடு செய்கிறார். வேறு வழி இல்லாமல் கிருஷ்ணாவை (துல்கர் சல்மான் ) மணக்கிறார். கல்பனாவுக்கு ராக்கெட் ஓட்ட வேண்டும் அதற்கான படிப்பு படிக்க வேண்டும் என்ற சிறு வயது லட்சியம் கிருஷ்ணாவுக்கு தெரிய வர அவர் மனைவி கல்பனாவை ராக்கெட் செலுத்தும் வீராங்கனை படிப்புக்கு படிக்க வைக்கிறார். இதற்கிடையில் பல்வேறு தடங்கல்கள் வர அதை அவரால் எதிர்கொள்ள முடிந்ததா? கல்பனா லட்சியம் நிறைவேறியதா? என்பதற்கு போராட்ட குணத்துடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

விமானம் ஓட்டும் பைலட்டாக வேண்டும் என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் சற்று வித்தியாசமாக ஆஸ்ட்ராநாட் (Astronaut) எனப்படும் ராக்கெட் செலுத்தும் வீராங்கனை ஆக வேண்டும் என்ற லட்சியத்தை சாத்மிகா சொல்லும்போது இதெல்லாம் நடக்கும் காரியமா என்று யோசிக்க வைக்கிறது

திடீரென்று துல்கர் சல்மானுடன் சாத்மிகாவுக்கு திருமணம் முடிந்ததும் லட்சியம் எல்லாம் இனி மூட்டை கட்டி வைக்க வேண்டியதுதான் என்று எண்ணும் நிலையில் “உன்னை நான் படிக்க வைக்கிறேன்” என்று துல்கர் சல்மான், மனைவி சாத்மிகாவுக்கு வாக்குறுதி தருவதுடன் அதற்காக கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் பொறுப்பை துல்கர் ஏற்றுக்கொள்வதும் தடைகள் வரும்போதெல்லாம் சாத்மிகாவுக்கு ஆறுதல் சொல்லி அவருக்கு ஊக்கம் தருவதும் பல இளைஞர்கள், இளைஞிகளுக்கு நம்பிக்கை தரும் காட்சிகளாக படம் முழுவதும் தொடர்கிறது.

ராக்கெட் செலுத்தும் அஸ்ட்ரோனட் படம் என்று வார்த்தையில் எளிதில் கூறி விடலாம் ஆனால் அதை பிரம்மாண்டமாக தயாரிப்பதற்கு துணிச்சல் வேண்டும், அந்த துணிச்சலை கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் ராக்கெட் ஏவுதளம், விண்வெளி, வெளிநாடு என்று காட்சிகள் சிறகு விரிப்பது கண்கொள்ளாக் காட்சி.

இப்படி ஒரு கணவன் நமக்கு கிடைத்தால் நாம் வாழ்க்கையில் சாதனைகளை செய்யலாம் என்று பெண்கள் ஏக்கம் கொள்ளும் அளவுக்கு மனைவி மீது பாசம் காட்டுவதுடன் அவரது லட்சியத்திற்காக முழுமையாக தன்னை அர்ப்பணிக்கும் குணம் கொண்ட வராக துல்கர் சல்மான் நடித்திருப்பது பெண்களை ஏக்க பெருமூச்சு விடுவைக்கும்.

அஸ்ட்ரோனட் (astronaut) ஆக வேண்டும் என்ற தனது லட்சியத்தை சிறு வயது முதல் தாங்கி நிற்கும் சாத்மிகா தனது அறிமுகப்படம் என்று தெரியாத வண்ணம் நடிப்பில் பல்வேறு பாவனைகள் காட்டியிருப்பதுடன் சில இடங்களில் கண்கலங்கவைக்கும் சென்டிமென்ட் காட்சியையும் தவறவிடவில்லை.

ராக்கெட் கட்டும் தளம் வைத்திருக்கும் தொழில் அதிபராக ஸ்ருதிஹாசன் மாறுபட்ட தனது நடிப்பை சூப்பராக வெளிப்படுத்தியி ருக்கிறார். தம் அடிப்பது தண்ணி அடிப்பது என்று ஏகத்துக்கு அந்தர் செய்தாலும் கதாபாத்திரத்தை எந்த விதத்திலும் கெடுக்காமல் கெத்தாக நடித்திருக்கிறார் ஸ்ருதி.

மேலும் ரூஹானி சர்மா, நாசர், கௌதம் வாசுதேவ்மகன், முரளி ஷர்மா சுவாசிகா, கோட்டா ஜெயராம், மான்சி சுதீர், சின்னி ஜெயந்த், பிரவீன், காசிரெட்டி சைதன்யா ஜன்னலகட்டா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

சந்திப் குன்னம், ரம்யா குன்னம் தயாரித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ் குமார் இசை காட்சிகளின் பிரம்மாண்டத்தை முழுமையாக ரசிக்க வைக்கிறது.
சுஜித் சாரங் ஒளிப்பதிவும் எந்த விதத்திலும் சோடையில்லை.

பவன் சதினேனி இப்படி ஒரு கதையை யோசித்ததே பெரிய விஷயம், செலவு பாராமல் அதை தயாரித்திருப்பது அதைவிட பெரிய விஷயம்.

ஆகாயத்தில் ஓர் தாரகை – குடும்பத்துடன் பார்க்க வேண்டிய சயின்ஸ் பிக்சன்.

Review by
k. jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

Stunt Director ‘Anl’ Arasu turns Director and Producer

Jai Chandran

Koozhangal Screening Today at TIFF21

Jai Chandran

சரத்குமார் குடியரசு தின வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend