Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மிஷன் சாண்டா (ஆங்கில அனிமேஷன் பட விமர்சனம்)

மிஷன் சாண்டா (ஆங்கில அனிமேஷன் பட விமர்சனம்)

கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி மிஷின் சாண்டா என்ற அருமை திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.

கதை: கிறிஸ்மஸ் தாத்தா ரிட்டையர்டு ஆனா நிலையில் கிறிஸ்மஸ் கிப்ட் கள் தருவதற்கான தொழிற்சாலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வரும் கிறிஸ்துமஸ்க்கு பரிசுகள் வழங்குவதற்கு அதுக்கான பார்சல் செய்யும் நடைமுறையை ரோபோக்கள் வைத்து நவீன முறையில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த தொழிற்சாலைக்கு சிறுவன் யோ யோ விஜயம் செய்கிறான். அப்போது தொழிற்சாலையில் உள்ள நவீன கம்ப்யூட்டர் கருவி உள்ளிட்ட அனைத்தும் மர்ம நபரால் ஹேக் செய்யப்படுகிறது. கிறிஸ்மஸ் விழாவையே அழிக்கப் போவதாக அந்த ஹேக்கர் பயன்படுத்துகிறார். அதைக் கேட்ட தொழிற்சாலை மேனேஜர் நிர்வாகிகள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தொழிற்சாலைக்கு வந்த சிறுவன் யோ யோ ஹக்கரின் திட்டத்தை எப்படி தவிடு முடி ஆக்குகிறான் என்பதுதான் கதை.

ஆங்கில அனிமேஷன் படம் என்றாலே ஹாலிவுட் ஞாபகம் தான் வரும் ஆனால் மிஷின் சாண்டா அனிமேஷன் படத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே இன்னும் சொல்லப்போனால் பெங்களூரில் ரிச்சர்டு கியூசோ, டாம்ஜான் மிட்ரிவ்ஸ்கி படத்தை இயக்கி இருக்கின்றனர்

இந்திய கலைஞர்களால் குறிப்பாக தமிழ் நிபுணர்களால் உருவாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த விதத்திலும் ஹாலிவுட் தரத்துக்கு குறையாமல் அனிமேஷன் காட்சிகள் மிகவும் கலர்ஃபுல்லாக, பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைக்கு முழு சான்றாக அமைகிறது.
இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அனிமேஷன் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெவ்வேறு வடிவில் மனதை கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கதையை பொருத்தவரை மேற்கத்திய கதையாக இருந்தாலும் குழந்தைகள் கைதட்டி ரசிக்கும் அளவுக்கு காட்சிகள் விறுவிறுப்பாகவும் காமெடி கலந்தும் படமாக்கப்பட்டடி போருப்பது வரவேற்கத்தக்கது.

ஸ்ரீராம் 2008ஆம் ஆண்டு **Broadvision Kids & Family** நிறுவனத்தை நிறுவினார். பிராட்விஷன் நிறுவனம் சார்பில் கௌரி ஸ்ரீராம் தயாரித்திருக்கிறார்.
வெளிநாட்டு கலைஞர்களின் பங்களிப்பும் இந்த படத்தில் தயாரிப்பு மற்றும் கதை அமைப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷின் சாண்டா -அனிமேஷன் பிரியர்களுக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் கேக்

 

Review By

K Jayachandhiran

www trending cinemas now.com

Related posts

மிஸஸ் சவுத் இந்தியாவில் தமிழ் பெண் தேர் v

Jai Chandran

யூ ஐ (UI) (பட விமர்சனம்)

Jai Chandran

The teaser of ‘Karavali’ is electrifying:

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend