Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரசவாதி (பட விமர்சனம்)

படம்: ரசவாதி

நடிப்பு: அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ஜி எம் சுந்தர், ரிஷிகாந்த், ரம்யா சுப்பிரமணியன்

தயாரிப்பு: சாந்தகுமார்

இசை: தமன் .எஸ்

ஒளிப்பதிவு: சரவணன் இளவரசு

இயக்கம்: சரத்குமார்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா

 

கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருக்கிறார் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்). ஐடியில் வேலை செய்யும் சூர்யா ( தான்யா) அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு கொடைக்கானலில் ரிசார்ட் ஒன்றில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார். அதே ஊருக்கு  இன்ஸ்பெக்டராக மாற்றலாகி வருகிறார் பரசு ராஜ்  (சுஜித் சங்கர்). சதாசிவம், சூர்யா காதலிக்கின்றனர். அதைப் பார்த்து பரசுராஜ் கோபம் அடைகிறார். அவர்களை பிரித்து எச்சரித்து அனுப்ப முயற்சிக்கிறார். அதேசமயம் சதாசிவனை பழிவாங்கவும் முயற்சிக்கிறார். இதில் சதா சிவத்திற்கும்,  பரசுராஜுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன? சதாசிவத்தை பரசுராஜ் பழிவாங்க  துடிப்பது ஏன் ? என்பதற்கான  சஸ்பென்சுக்கு விடை  தருகிறது ரசவாதி.

ரசவாதி என்ற டைட்டில் ஹீரோவாக நடித்திருக்கும் அர்ஜுன் தாசுக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது.

சித்த மருத்துவராக வருவதுடன் வர்ம கலையையும் கற்றுத் தேர்ந்தவராக  அர்ஜுன் தாஸ் வேடமேற்று இருக்கிறார். ஒரு காலை தாங்கி தாங்கி நடந்து வரும் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்திற்கு பின்னால் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது என்பதை தொடக்கத்திலேயே உணர முடிகிறது. ஆனால் அது என்ன என்பதை  உடனடியாக கணிக்க முடியவில்லை .  அந்த சஸ்பென்சை இயக்குனர் சாந்தகுமார் மெல்ல மெல்ல ஓபன் செய்யும்போது நிகழ்காலமும் கடந்த காலமும் மாறி மாறி வந்து செல்கிறது.

ஒரு சிறிய தொடர்பு தான் ஹீரோ அர்ஜுன் தாஸுக்கும், வில்லன் சுஜித் சங்கருக்கும் இடையே இழையோடுகிறது. அந்த சஸ்பென்சை முழு நீள திரைக் கதையாக வடிவம் தந்திருப்பது நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நிறைவான நாவலை படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்து கிறது.

என்னதான் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்திருந்தாலும்,  காதல் உணர்வை மென்மையாக வெளிப்படுத்தினாலும் அவரது கணீர்  குரல்   வேடத்துக்கு ஸ்பீடு பிரேக் போடுகிறது.

சண்டைக் காட்சிகளில் அர்ஜுன் தாஸ் வேகம் காட்டி இருப்பது அவரது ஆக்சன் அவதாரத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.

தான்யா ரவிச்சந்திரன் முதல் சீனிலேயே கண்ணீருடன் வருகிறார்.  அவருக்கு பின்னால் பெரிய சோகம் இருக்கும் என்று பார்த்தால் அடுத்த சீனிலேயே அவர் கஞ்சா புகைத்து  புகைபுகை யாக ஊதி தள்ளும்போது தான்யாவா இப்படி என்ற அதிர்ச்சியை ஏற்படுத்து கிறார்.

பல காட்சிகளில் அவர் உணர்ச்சி களை இன்னும் கூட அதிகமாக வெளிப்படுத்தி இருந்தால் கதாபாத்திரத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக அமைந்திருக்கும். பல காட்சிகளில்  வெறுமனே நிற்பது போல தான் தெரிகிறது. இந்த அளவுக்கு நடித்தால் போதும் என்று இயக்குனர் சொல்லிவிட்டாரோ என்னவோ ஒரு எல்லைக்குள் ளேயே தனது உணர்ச்சிகளையும் நடிப்பையும் அடக்கி கொண்டிருக். கிறார் தான்யா.

தமிழுக்கு புது வில்லனாக என்டரி கொடுத்திருக்கிறார் சுஜித் சங்கர். போலீஸ் இன்ஸ்பெக்டராக  வரும் அவர் சினிமா போலீஸ் போல் இல்லாமல் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டு ஸ்கோர்  செய்கிறார். அர்ஜுன் தாசை பின் தொடர்ந்து  குடைச்சல் கொடுக்கும்போது தான்யாவுக்கு பெரிதாக வலை விரிக்கிறார் என்று  எண்ண தோன்றுகிறது ஆனால் அதற்கு பின்னால் இன்னொரு கதை இருப்பதால் நேர்கோட்டில் செல்லும் திரைக்கதை   ஜிக் ஜாக் கோட்டிற்கு மாற்றி விடுகிறது.

படத்தில் மற்றொரு கதாநாயகி யாக ரேஷ்மா வெங்கடேஷ் நடித்திருக்கிறார். தொடக்க காட்சிகளில் துள்ளலாக நடித்து மௌன ராகம் ரேவதியை ஞாபகப்படுத்துகிறார்.

மௌனகுரு,  மகாமுனி என இரண்டு மாறுபட்ட படங்களை இயக்கிய அளித்த சாந்தகுமார் மற்றொரு மாறுபட்ட களத்தில் ரசவாதி படத்தை இயக்கி அளித்திருக்கிறார்.

சோலோ எழுத்தாளர் அதாவது கதை  விவாதத்திற்காக யாரையும் உடன் சேர்த்துக் கொள்ளாமல் தனியாக அமர்ந்து முழு ஸ்கிரிபைட்டையும் எழுதும் திறமை கொண்ட சாந்தகுமார் இந்த படத்தின் ஸ்கிரிபைட்டையும் அதே பாணியில் உருவாகி இருக்கிறார் அதனால்தான் அவரால் முன்னும் பின்னுமாக கதை நகர்ந்தாலும்   எந்த குழப்பமும் ஏற்படாமல் சஸ்பென்சை சிதறவிடாமல் கட்டுக் கோப்பாக இயக்கி ரசிகர்களை இருக்கையில் கட்டி போட்டு வைத்திருக்க முடிகிறது.

தமன் எஸ் இசை  காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

சரவணன் இளவரசு கேமரா களத்தை கச்சிதமாக கண்முன் நிறுத்தி இருக்கிறது.

ரசவாதி- மிதவாதி அல்ல.

 

 

 

 

 

 

 

 

Related posts

DevaDasBrothers Now Running In Theatres

Jai Chandran

A new teaser out from KanakamKaaminiKalaham

Jai Chandran

பையா 8 வருட கொண்டாட்டம்: கார்த்தி நினைவுகள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend