படம்: உயிர் தமிழுக்கு
நடிப்பு: அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்பிரமணியம் சிவா, மகாநதி சங்கர், ராஜா சிம்மன், சக்தி சரவணன்
தயாரிப்பு: ஆதம் பாவா
இசை: வித்யாசாகர்
இயக்கம்: ஆதம் பாவா
பிஆர்ஓ: ஏ. ஜான்
கேபிள் டிவி நிறுவனம் நடத்துபவர் அமீர் ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. அதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகள் சாந்தினி ஶ்ரீதரன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். சாந்தினி ஶ்ரீ தரனை கண்டதும் காதல் கொள்ளும் அமீர்.அவரை காதலிப்பதற்காக அரசியலில் குதிக்கிறார் கவுன்சிலர் போட்டியில் களம் இறங்குகிறார். அமீரின் பேச்சுத் திறனை கண்டு சாந்தினிஶ ஶ்ரீதரணுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. அதற்கு ஆனந்தராஜ் எதிர்ப்பு தெரிவிக் கிறார். இந்நிலையில் ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படு கிறார். அமீர்தான் தனது தந்தையை கொன்று விட்டார் என்று எண்ணி சாந்தினி ஶ்ரீதரன் அவர் மீது வெறுப்பு காட்டுகிறார். போலீசில் புகார் கொடுத்து அமீரை சிறையில் அடைகிறார் இவர்களுக்குள் நடக்கும் அரசியல் போராட்டம், பிளஸ் காதல் போராட்டம் என்னவாகிறது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
வடசென்னை யோகி உள்ளிட்ட படங்களில் அமீர் நடித்திருந்தாலும் அதில் ஒரு எல்லைக்குட்பட்ட நடிப்பாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் ஆனால் உயிர் தமிழுக்கு படத்தில் எம்ஜிஆர் பாண்டி என்ற கதாபாத்திரம் ஏற்று கட்டுப்பாடுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு ரொம்பவும் ஜாலியாக நடித்து இவர் அமீர் தானா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்.
சாந்தினி ஶ்ரீதரனை கண்டதும் காதல் கொள்ளும் அமீர் அவருக்கு காதல் வலை விரிப்பதற்காக தேர்தல் பிரச்சார களத்தை அமீர் பயன். படுத்திக் கொள்ளும் கட்டங்கள் சுவாரஸ்யமானது.
சாந்தினி ஶ்ரீதரன் கதாபாத்திர பெயர் தமிழ் என்பதால் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவது போல் அமீர் அடுக்கு தொடரில் பேசி சாந்தினிஶ்ரீதரனின் மனம் குளிர டன் கணக்கில் ஐஸ் கட்டிகளை அள்ளிக் கொட்டுகிறார்.
அமீரின் தமிழ் வசன உச்சரிப்பு அபாரம். இதுவரை அவரிடம் இப்படி ஒரு திறமை இருக்கிறதா என்பது தெரியாமலேயே இருந்தது. அந்த திறமையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா.
வந்தோமா டூயட் பாடினோமா என்ற வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் நடிக்க தெரிந்தால் மட்டுமே தமிழ் என்ற கதாபாத் திரத்தை ஏற்று நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சாந்தினி.
அமீர் பேச்சில் மயங்கி அவர் மீது காதல் பார்வையை பொழியும் சாந்தினி ஶ்ரீ தரன் பின்னர் அமீர் தான் தன் தந்தையை கொன்று விட்டார் என்று எண்ணி அவர் மீது அனல் பார்வை வீசுவதுமான நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார்
எதிர்க்கட்சி அரசியல் தலைவராக வரும் ஆனந்தராஜ் அளவுடன் நடித்திருக்கிறார். அமீர் உறவுக்காரராக வரும் இமான் அண்ணாச்சி தொடக்கம் முதல் இறுதி வரை அமீருடனே பயணித்து அவரிடம் வாங்கி கட்டிக் கொள்வதெல்லாம் சிரிப்போ சிரிப்பு. இன்னொரு பக்கம் கஞ்சா கருப்பு, சக்தி சரவணன் காமெடி செய்கின்றனர்.
மாரிமுத்து, மகாநதி சங்கர் ராஜ்கபூர், சுப்ரமணியம் சிவா என எந்த கதாபாத்திரமும் வீண் இல்லை
.படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் ஆதம்பாவா. அரசியல் சட்டையர் கதை நிறைய வந்திருக்கிறது அதே அரசியல் சட்டையர் கதையை காமெடி களத்தில் தந்திருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா. சமீபகால அரசியல்வாதி ஒருவரையும் விட்டு வைக்காமல் நய்யாண்டி செய்து அரங்கை கலகலப்பில் ஆழ்த்தி விடுகிறார் இயக்குனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்தியாசாகர் இசையில் பாடல்கள் ரிப்பீட் மோடுக்கு ரசிகர்களை கொண்டு நிறுத்து கிறது. குறிப்பாக எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடி இருக்கும் எம்ஜிஆர் புகழ் சொல்லும் பாடல் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ஒரு தேசிய கீதமாக இருக்கும். எம்ஜிஆர் விழா மேடைகளில் இந்த பாடல் இனி தவறாமல் ஒலிக்கும்.
உயிர் தமிழுக்கு – காதலலுடன் அரசியல் நய்யாண்டி.