Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உலக கோப்பை அரையிறுதியில் ரன்வீர் கபூர்

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில், ‘அனிமல்’ திரைப்படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை கவரவி ருக்கிறார்.

பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த நடிகர் ரன்பீர் கபூர்-  மும்பையில் நடை பெறும் இந்தியா- நியூசி லாந்து இடையேயான உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் கலந்து கொள்கிறார். இதன்போது அவரது நடிப்பில் வெளியாக விருக்கும் ‘அனிமல்’ திரைப்படத்தினை.. கிரிக்கெட் கொண்டாட் டத்துடன் வித்தியாசமாக ஒருங்கிணைத்து ஒட்டு மொத்த பார்வையாளர் களின் கவனத்தை ஈர்க்க விருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன்சிங், முகமது கைஃப், இர்ஃபான் கான் மற்றும் கிரிக்கெட் போட்டியின் தொகுப்பா ளரான ஜதின் சப்ரு போன்ற கிரிக்கெட் நிபுணர்களுடன் ரன்பீர் கபூர் கலந்து கொள்கிறார்.‌ இதன் மூலம் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி யுடன் கிரிக்கெட் நிபுணர் களும் ஒன்றிணைகி றார்கள்.

‘அனிமல்’ திரைப்படத்தில் கதையின் நாயகனான ரன்பீர் கபூரின் கதாபாத் திரத்திற்கும்… விளை யாட்டின் ஜென்டில்மேன் போன்ற தோற்றத்தில் உள்ள அதன் ஆக்ரோஷம், உயர்ந்த உணர்ச்சிகள் மற்றும் போட்டி மனப் பான்மை ஆகியவற்றுக்கு இடையே ஒற்றுமைகள் இருப்பதால், இந்த ஒருங்கிணைப்பு முக்கி யத்துவம் பெறுகிறது.

ஒரு சிலிர்ப்பான அனுப வத்தின் வாக்குறுதி களுடன் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டி- பாலிவுட் மற்றும் கிரிக்கெட் மீதான ரசிகர் களின் அளவு கடந்த காதலை… ஒரு மறக்க இயலாத நிகழ்வாக மாற்றம் பெறுகிறது.

Related posts

சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் பத்திரிகையாளர் சந்திப்பு..

Jai Chandran

தளபதி விஜய் 46வது பிறந்ததினம்

Jai Chandran

Disney plus hot star announces Next season of “kana kaanum kaalangal” series

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend