Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரம்யா நம்பீசன் குரலில் பெண்கள் தின ஸ்பெஷல், பத்ரி வெங்கடேஷ் கவிதை !

நடிகை ரம்யா நம்பீசன் நடிப்பு மட்டுமல்லாது தன் பன்முகதிறமைகளை வெளிக்கொணரும்பொருட்டு YouTube தளத்தில் தனக்கென ஒரு தனி சேனலை ஆரம்பத்து, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை அசத்தி வருகிறார். Me, Unhide, Sunset Diary மேலும் அவரது திறமையில் வெளிவந்த பல நிகழ்ச்சிகள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டு பெற்றுள்ளது. இதில் அடுத்ததாக உலக மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வண்ணமாக பெண்களை போற்றும் பத்ரி வெங்கடேஷ் அவர்களின் Rage கவிதை ரம்யா நம்பீசன் குரலில் உருவாகியுள்ளது. ரம்யா நம்பீசன் இக்கவிதையை தன் குரலில் விவரிக்க, இதனை பத்ரி வெங்கடேஷ் எழுதி இயக்கியுள்ளார். பல்லு இக்கவிதை நிகழ்வை ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகவா S அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறுகையில்:

ஆத்திரம், கோபம் இரண்டும் பயிற்சிக்குட்பட்டதே, காளி அல்லது சீதா இரண்டில் எதுவாக இருக்க வேண்டுமென்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும். இந்த முக்கியமான கருத்தை தான் இந்த கவிதை சொல்ல முயல்கிறது. நடிகை ரம்யா நம்பீசன் மீது எப்போதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, நடிகையாக மட்டுமமின்றி, இசை வல்லுநராகவும் மேலும் பல பன்முக திறமைகளும் கொண்டவர். தன் திறமை மூலம் இந்த தளத்தில் மற்ற துறை திறமையாளர்களுக்கும் வாய்ப்பு தந்து அறிமுகப்படுத்தும் அவரது பண்பு மெச்சதக்கது.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் மற்றும் ரம்யா நம்பீசன் இருவரும் ஏற்கனவே “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளார்கள். இப்படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் உலகமெங்கும் கோடைகாலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

Sneak Peek from Saamanyudu is out now..

Jai Chandran

பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர் !

Jai Chandran

நடிகர் சங்கத்துக்கு நெப்போலியன் 1 கோடி நன்கொடை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend